இயக்குநர் முத்தையாவுடன் இணையும் அருண் விஜய்!

0
36

முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்றம் ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நடிகர் அருண் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ’இயக்குநர் முத்தையாவுடன் இணைய இருக்கும் எனது 38-வது படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்றம் ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாகும். ஒரு வலிமையான புதிய அத்தியாயம் தொடங்க இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை உள்ளடக்கிய படம் ஒன்றையும் அருண் விஜய் பகிர்ந்துள்ளார். அதில், இருபுறமும் வீரர்கள் நிற்க, வாள் ஓங்கியபடி ஆக்ரோஷமாக நிற்கும் கொற்றவையின் சிற்பம் ஒன்று உள்ளது. அதன்கீழ், ‘பாண்டிய குலதெவ்வரினத்தின் காவல் தெய்வம் கொற்றவையாச்சி’ என்று செதுக்கப்பட்டுள்ளது.    

நேதாஜி பிலிம்ஸ் சார்பில் சண்முகவேல் பாண்டியன் தயாரிக்க இருக்கும் இந்தப் படத்துக்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார்.  

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here