குமரி மாவட்டம் அண்டுகோடு பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் (42) என்பவர் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டார். நேற்று ரப்பர் பால் உறைய வைக்கப் பயன்படுத்தும் ஆசிட்டை குடித்து மயங்கிய நிலையில், அவரது அண்ணன் செல்வன் அவரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.















