அருமனை பகுதி அருகாமையிலிருந்து அணைமுகம் மற்றும் ஒருநூறாம் வயல் பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினந்தோறும் ஏராளமான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்கின்றன.
தற்போது இந்த சாலை பெயர்ந்து குண்டு குழியாக காட்சி அளிக்கிறது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி குழிகளில் விழுந்து காயம் அடைகின்றனர். பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் இந்த சாலை வழியாக சைக்கிள், பைக்கில் செல்லும்போது நிலைதடுமாறி செல்வதை காண முடிகிறது. எனவே பெரிய அசௌகரியம் ஏற்படும் அந்த பல்லாங்குழி சாலையால் தடுமாறும் வாகன ஓட்டிகளைக் காக்க, சேதம் அடைந்த சாலை சீரமைத்து புதிய சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.