Home கன்னியாகுமரி செய்திகள் அருமனை: தொழிலாளியை  கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

அருமனை: தொழிலாளியை  கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

0

அருமனை, புதுக்குளவரம்பு என்ற இடத்தை சேர்ந்தவர் ரவி (55). ரவி மனைவி குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் புஷ்பராஜ் (34). தொழிலாளி. ரவி தனது வீட்டில் அடிக்கடி தனக்கு தானே சத்தம் போட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 

இதனை புஷ்பராஜ் கண்டித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 3-12-2012 அன்று மாலை வீட்டிலிருந்து ரவி சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த புஷ்பராஜ், ரவியின் வீட்டுக்குள் புகுந்து, அவரை தாக்கி தலையை சுவரில் பலமுறை இடித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரவி துடிதுடித்து பலியானார். இது குறித்து ரவியின் தாயார் செல்லம்மாள் என்பவர் அளித்த புகார் மேல் அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து புஷ்பராஜை கைது செய்தனர். 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version