‘அர்னாப்’ புயல் எச்சரிக்கை: ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் முன்னேற்பாடுகள் தீவிரம்

0
19

வங்​கக்​கடலில் உரு​வாகி​யுள்ள குறைந்த காற்று அழுத்​தத் தாழ்வு மண்​டலம் ‘அர்னாப்’ தீவிர புய​லாக வலுப்பெற்று, அக்​டோபர் 28-ம் தேதி ஆந்திர கடலோரப் பகுதி​யில் கரையைக் கடக்​கும் என இந்​திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்​துள்​ளது. இதனைத் தொடர்ந்து ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்​களில் முன்​னெச்​சரிக்கை நட​வடிக்​கைகள் தீவிரப்படுத்தப்​பட்​டுள்​ளன.

புயல் கரையைக் கடக்​கும்​போது மணிக்கு 115 முதல் 125 கி.மீ வேகத்​திலும், இடை​யிடையே 140 கி.மீ வேகத்​திலும் பலத்த சூறாவளிக்​காற்று வீசக்​கூடும் என்​ப​தால், ஆந்​திராவின் பாபட்லா முதல் விசாகப்​பட்​டினம் வரையி​லான கடலோரப் பகுதி​கள் உயர் எச்​சரிக்​கை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளன.

புயல் ஆந்​திராவில் கரையைக் கடந்​தா​லும், ஒடிசாவின் தெற்கு மற்​றும் கடலோர மாவட்​டங்​களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்​யக்​கூடும் என்​ப​தால், ராயகடா, கோராபுட், மல்காங்​கிரி, கஜபதி, கஞ்​சம் ஆகிய 5 மாவட்​டங்​களில் அக்.28, 29 ஆகிய தேதி​களில் பள்ளி, கல்​லூரி​களுக்கு விடு​முறை அறிவிக்கப்பட்​டுள்​ளது.

அவசரநிலை​யைச் சமாளிக்க ஒடிசா பேரிடர் விரைவுப் படை​யின் சுமார் 60 குழுக்​கள், தேசி​யப் பேரிடர் மீட்​புப் படை​யின் 17 குழுக்கள், தீயணைப்​புச் சேவை​யின் 225 குழுக்​கள் களமிறக்கப்பட்​டுள்​ளன.கஞ்​சம் மாவட்​டத்​தில் மட்​டும் 100 புயல் நிவாரண முகாம்​களும், 1,000 தற்​காலிக தங்​குமிடங்​களும் தயார் செய்​யப்​பட்​டு உள்​ளன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here