தவெக எம்எல்ஏ-வுடன் வாக்குவாதம்: ராயபுரம் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

0
21

தவெக எம்​எல்​ஏ-வுடன் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்ட ராயபுரம் காவல் ஆய்​வாளர் காத்​திருப்​போர் பட்​டியலுக்கு மாற்​றப்​பட்​டுள்​ளார்.

சென்னை ராயபுரம் பகு​தி​யில் உள்ள திருமண மண்​டபம் ஒன்​றில் இரு தினங்​களுக்கு முன்​னர் இஸ்​லாமிய இளைஞர் ஒரு​வருக்கு திரு​மணம் நடை​பெற இருந்​தது.

அப்​போது இளம்​பெண் ஒரு​வர், பெண் சமூக ஆர்​வலர் மற்​றும் உறவினர்​கள் சிலருடன் அங்கு சென்​று, நீதி வேண்​டும் என்ற பதாகை ஏந்தி திரு​மணத்தை நிறுத்​தக் கோரி ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டார்.

இதனால் அங்கு பரபரப்​பான சூழல் ஏற்​பட்​டது. தகவல் அறிந்து சம்பவ இடத்​துக்​குச் சென்ற ராயபுரம் காவல் நிலைய ஆய்​வாளர் சிதம்​பரம் பாரதி தலை​மையி​லான போலீ​ஸார், அந்​தப் பெண்​ணிடம் விசா​ரணை நடத்​தினர். இதில், அந்​தப் பெண் ஈரோடு மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர்.

8 ஆண்​டு​களுக்கு முன்பு சென்னை வந்த அவர், வடபழனி​யில் தங்கி அதே பகு​தி​யில் உள்ள ஒரு மாலில் வேலை செய்​துள்​ளார். அப்​போது அவருடன் வேலை​பார்த்த சூளைமேடு பகு​தி​யைச் சேர்ந்த இஸ்​லாமிய இளைஞர் (திரு​மணம் நடக்க இருந்​தவர்) ஒரு​வருடன் பழக்​கம் ஏற்​பட்டு காதலாக மாறி​யுள்​ளது.

இந்​நிலை​யில், தன்னை இந்த இளைஞர் இஸ்​லாம் மதத்​துக்கு மாறச் சொல்​லியதை அடுத்து அவரும் மதம் மாறி​யுள்​ளார். இந்​தச் சூழலில்​தான், வேறொரு பெண்​ணுடன் திரு​மணம் நடை​பெற இருந்​ததும், அதைத் தடுப்​ப​தற்​காக வந்​த​தாக​வும் அந்​தப் பெண் தெரி​வித்​தார்.

அப்​போது, இளம்​பெண்​ணுக்கு ஆதர​வாக வந்த சமூக ஆர்​வலர் மற்​றும் சிலரை ஆய்​வாளர் சிதம்​பரம் பாரதி ஒரு​மை​யில் திட்​டியதோடு தாக்​கிய​தாகக் கூறப்​படு​கிறது.

மேலும், இந்த விவ​காரம் குறித்து நியா​யம் கேட்டு காவல் நிலை​யம் சென்ற ராயபுரம் தொகுதி தவெக எம்​எல்ஏ விஜய் தாமு​விட​மும் வரம்​புமீறி பேசி​ய​தாக​வும் கூறப்​படு​கிறது. இந்த வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலானது.

இதுகுறித்து விசா​ரணை நடை​பெற்ற நிலை​யில், ஆய்​வாளர் சிதம்​பரம் பார​தியை காத்​திருப்​போர் பட்​டியலுக்கு மாற்​றி காவல்​ ஆணை​யர் உத்தரவிட்டுள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here