Home தேசிய செய்திகள் கர்நாடகாவில் ஊமத்தங்காய் விற்றதால் அமேசான், பிக் பாஸ்கெட் உரிமம் ரத்து

கர்நாடகாவில் ஊமத்தங்காய் விற்றதால் அமேசான், பிக் பாஸ்கெட் உரிமம் ரத்து

0

கர்நாடகாவில் ஊமத்தங்காய் விற்​பனை செய்த அமேசான், பிக் பாஸ்கெட், ஸ்விகி இன்ஸ்டா​மார்ட் உள்​ளிட்ட நிறுவனங்​களுக்கு வழங்​கப்​பட்ட உணவு விநி​யோக உரிமத்தை அம்​மாநில அரசு ரத்து செய்​துள்​ளது.

கர்​நாட​கா​வில் வாடிக்​கை​யாளர்​கள் ஆர்​டர் செய்​ததும் 15 நிமிடங்​களுக்​குள் பொருட்​களை டெலிவரி செய்யும் அமே​சான், ஸ்விகி இன்​ஸ்​டா​மார்ட், பிக்பாஸ்​கெட் உள்​ளிட்ட குவிக் காமர்ஸ் நிறு​வனங்​கள் இயங்கி வரு​கின்​றன. இந்த நிறு​வனங்​களில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்​கும் ஊமத்​தப்​பூ, ஊமத்​தங்​காய், ஊமத்​தை விதைகள் விற்​பனை செய்​யப்​படு​வ​தாக புகார் எழுந்​தது.

இதனை விசா​ரித்த கர்​நாடக உணவுத்​துறை, ஊமத்​தங்​காய், ஊமத்தை விதை உள்​ளிட்​ட​வற்றை உணவு பொருட்​களின் வரிசை​யில் விற்​பனை செய்​த​தால் அமே​சான், ஸ்விகி இன்​ஸ்​டா​மார்ட், பிக் பாஸ்​கெட் உள்​ளிட்ட குவிக் காமர்ஸ் நிறு​வனங்​களுக்கு வழங்கப்​பட்ட உணவு விநி​யோக உரிமத்தை ரத்து செய்​வ​தாக அறி​வித்​துள்​ளது.

இந்த வகை தாவரம் மிக​வும் நச்​சுத்​தன்மை கொண்​டது. ஆனால் அந்த நிறு​வனங்​கள் இந்​திய உணவுப் பாது​காப்பு மற்​றும் தர நிர்ணய ஆணை​யத்​தின் உரிமம் பெற்​றதற்​கான அறி​விப்​புடன் விற்​பனை செய்​துள்​ளது. சம்​பந்​தப்​பட்ட நிறு​வனங்​கள் இது தொடர்​பான விளக்க அறிக்​கையை உடனடி​யாக சமர்ப்​பிக்​கு​மாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version