‘எப்​போதும் மன உறு​தி​யோடு இருங்கள்’ – விவாகரத்​துக்​குப் பிறகு ஹன்சிகா பதிவு

0
103

நடிகை ஹன்சிகா மோத்வானி, கடந்த 2022-ம் ஆண்டு சோஹைல் கட்டாரியா என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் ஜெய்ப்பூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு ஹன்சிகாவுக்கும் கணவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது.

இதையடுத்து 2024-ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். பின்னர் விவாகரத்துக் கோரி மும்பை பாந்த்ராவில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கியுள்ளது. விவாகரத்து பெற்றாலும் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெற மறுத்துவிட்டார்.

இந்நிலையில் விவாகரத்துக்குப் பிறகு முதன்முறையாக நடிகை ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பஞ்சாபி வார்த்தை ஒன்றை குறிப்பிட்டுள்ளார். அந்த வார்த்தைக்கு, வாழ்க்கையில் என்ன சிரமங்களை எதிர்கொண்டாலும் எப்போதும் மன உறுதியோடும், தளராத மகிழ்ச்சியோடும் முன்னேறுங்கள் என்பது அர்த்தம். இதையடுத்து தான் வலிமையுடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here