அமெரிக்க ஓபன் டென்னிஸ் 3-வது சுற்றில் அல்கராஸ், சபலென்கா

0
30

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூ​யார்க் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று முன்​தினம் நடைபெற்ற ஆடவர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் 2-ம் நிலை வீர​ரான ஸ்பெ​யினின் கார்லோஸ் அல்கராஸ் 4-6, 6-0, 6-3, 6-2 என்ற செட் கணக்​கில் 72-ம் நிலை வீர​ரான போர்ச்​சுகலின் ஜெய்மி ஃபாரியாவை வீழ்த்தி 3-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார். 7-ம் நிலை வீர​ரான ரஷ்​யா​வின் டேனியல் மேத்​வ​தேவ் 6-1, 6-3, 7-5 என்ற செட் கணக்​கில் அமெரிக்​கா​வின் செபாஸ்​டியன் கோர்​ஸ்​னியை தோற்​கடித்​தார்.

8-ம் நிலை வீர​ரான அமெரிக்​கா​வின் பென் ஷெல்​டன் 6-3, 5-7, 7-6 (7-3), 7-5 என்ற செட் கணக்​கில் 47-ம் நிலை வீர​ரான போலந்​தின் ஹூபர்ட் ஹர்​காஸை​யும், 11-ம் நிலை வீர​ரான அமெரிக்​கா​வின் பிரான்​செஸ் தியாபோ 6-3, 7-6 (7-2), 7-5 என்ற செட் கணக்​கில் 157-ம் நிலை வீர​ரான ஜப்​பானின் ரெய் சகாமோட்​டோவை​யும், 15-ம் நிலை வீர​ரான கஜகஸ்​தானின் அலெக்​ஸாண்​டர் பப்​ளிக் 6-3, 6-1, 6-1 என்ற செட் கணக்​கில் 67-ம் நிலை வீர​ரான பிரான்​ஸின் அட்​ரியன் மனரினோவை​யும் வீழ்த்தி 3-வது சுற்​றுக்கு முன்​னேறினர்.

18-ம் நிலை வீர​ரான செக் குடியரசின் ஜிரி லெஹெக்​கா, 20-ம் நிலை வீர​ரான அமெரிக்​கா​வின் டாமி பால், 22-ம் நிலை வீர​ரான மோனாக்​கோ​வின் வாலண்​டின் வச்​சேரோட், 26-ம் நிலை வீர​ரான பிரான்​ஸின் ஆர்​தர் ரின்​டர்​கெனெக், 27-ம் நிலை வீர​ரான அர்​ஜெண்​டி​னா​வின் தாமஸ் எட்​சேவெரி ஆகியோ​ரும் தங்​களது ஆட்டங்​களில் வெற்றி பெற்று 3-வது சுற்​றில் நுழைந்​தனர். 23-ம் நிலை வீர​ரான ரஷ்​யா​வின் ஆந்த்ரே ரூப்​லெவ் 7-6 (7-3), 2-6, 4-6, 4-6 என்ற செட் கணக்​கில் 39-ம் நிலை வீர​ரான ஸ்பெ​யினின் டேனியல் மெரி​டா​விடம் தோல்வி அடைந்​தார்.

மகளிர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் நடப்பு சாம்​பியனும் முதல் நிலை வீராங்​க​னை​யு​மான பெலாரஸின் அரினா சபலென்கா 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்​கில் ரஷ்​யா​வின் போலினா லட்​சென்​கோவை​யும், 3-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் ஜெசிகா பெகுலா 6-3, 6-1 என்ற செட் கணக்​கில் சகநாட்​டைச் சேர்ந்த சோபியா கெனினை​யும், 6-ம் நிலை வீராங்​க​னை​யான செக்​குடியரசின் லின்டா நோஸ்​கோவா 6-4, 6-2 என்ற செட் கணக்​கில் தாய்​லாந்​தின் லன்​லானா தரருடியை​யும் வீழ்த்தி 3-வது சுற்​றில் நுழைந்​தனர்.

7-ம் நிலை வீராங்​க​னை​யான செக்​குடியரசின் கரோலினா முச்சோவா 6-1, 6-0 என்ற நேர் செட்​டில் கிரேட் பிரிட்​டனி கேட்டி போல்​டரை​யும், 9-ம் நிலை வீராங்​க​னை​யான உக்​ரைனின் எலினா ஸ்விட்​டோலினா 6-2, 6-7 (6-8), 6-4 என்ற செட் கணக்​கில் ஆஸ்​திரேலி​யா​வின் மாயா​வை​யும், 11-ம் நிலை வீராங்​க​னை​யான உக்​ரைனின் மார்தா கோஸ்ட்​யுக் 6-1, 7-5 என்ற செட் கணக்​கில் அமெரிக்​கா​வின் ஸ்லோன் ஸ்டீபன்​ஸை​யும் தோற்​கடித்து 3-வது சுற்​றுக்கு முன்​னேறினர்.

15-ம் நிலை வீராங்​க​னை​யான ரஷ்​யா​வின் டயானா ஷ்னைடர் 6-1, 7-6 (7-4) என்ற செட் கணக்​கில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்​தி​னார். 16-ம் நிலை வீராங்​க​னை​யான ருமேனி​யா​வின் சொர்னா கிறிஸ்​டி​யா, 18-ம் நிலை வீராங்​க​னை​யான ரஷ்​யா​வின் கேத்​ரினா அலெக்​ஸாண்ட்​ரோ​வா, 19-ம் நிலை வீராங்​க​னை​யான இத்​தாலி​யின் ஜாஸ்​மின் பவுலினி, 21-ம் நிலை வீராங்​க​னை​யான ரஷ்​யா​வின் அனா கலின்​ஸ்​க​யா, 26-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் எம்மா நவர்ரோ ஆகியோ​ரும் தங்​களது ஆட்​டங்​களில் வெற்​றி பெற்​று 3-வது சுற்​றில்​ நுழைந்​தனர்​.

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் ரஷ்யாவின் போலினா லட்சென்கோவுக்கு எதிராக ஆக்ரோஷமாக விளையாடுகிறார் நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here