தவெகவின் முதல் பட்ஜெட், கட்சி வளர்ச்சி குறித்து விவாதிக்க அடுத்த மாதம் அதிமுக செயற்குழு: பழனிசாமி திட்டம்

0
21

அ​தி​முக செயற்​குழுக் கூட்​டத்தை அடுத்த மாதம் கூட்ட கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி திட்​ட​மிட்​டுள்​ளார். நடந்து முடிந்த தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதி​முக 47 இடங்​களில் வென்​றது. தவெக 108 இடங்​களில் வென்று ஆட்​சி​யைப் பிடித்​தது.

ஆட்​சியை தக்க வைத்​துக்​கொள்ள அதி​முக​வின் ஆதரவை தவெக நாடியது. தொடர்ந்து பழனி​சாமி​யின் எதிர்ப்பை மீறி, முன்​னாள் அமைச்​சர் சி.​வி.சண்​முகம் தலை​மை​யில் 25 எம்​எல்​ஏக்​கள் தவெக அரசுக்கு ஆதர​வளித்​தனர்.

பொதுக்​குழு​வைக் கூட்​டி, அதி​முக​வின் தோல்விக்​கான காரணத்தை விவா​திக்க வேண்​டும் என்​றும் சி.​வி.சண்​முகம் வலி​யுறுத்​தி​னார். மேலும் பொதுக்​குழு​வைக் கூட்டி பொதுச்​செய​லா​ளர் பதவியி​லிருந்து தம்மை நீக்க திட்​ட​மிடு​வ​தாக, பழனி​சாமிக்கு கிடைத்த தகவலின் அடிப்​படை​யில், சி.​வி.சண்​முகம் மற்​றும் அவரது ஆதர​வாளர்​கள் பலரின் மாவட்​டச் செய​லா​ளர் உள்​ளிட்ட அனைத்து பதவிகளை​யும் பறித்​தார்.

உடனடி​யாக புதிய மாவட்ட செய​லா​ளர்​களை​யும் நியமித்​தார். இதனிடையே முன்​னாள் அமைச்​சர்​கள் சி.​விஜய​பாஸ்​கர், எம்​.ஆர்​.​விஜய​பாஸ்​கர் உள்​ளிட்ட 6 அதி​முக எம்​எல்​ஏக்​கள் தங்​கள் பதவியை ராஜி​னாமா செய்​து​விட்​டு, தவெக​வில் இணைந்​தனர்.

சி.​வி.சண்​முகம் அணி​யில் மீதமிருந்த 19 எம்​எல்​ஏக்​கள் பழனி​சாமி​யுடன் சமரச​மாகினர். அதனைத் தொடர்ந்து அனை​வருக்​கும் மாநில பொறுப்​பு​களை பழனி​சாமி வழங்​கி​னார்.

அதி​காரம் இல்​லாத மாநிலப் பதவி தேவை​யில்​லை. பழையபடி மாவட்​டச் செய​லா​ளர் பதவி வேண்​டும் என கோரிக்கை வைத்த நிலை​யில், அதை பழனி​சாமி ஏற்​க​வில்​லை. அதனால் புதிய பொறுப்​பு​கள் எங்​களுக்கு வேண்​டாம்.

தொண்​டர்​களாகவே தொடர்​கிறோம் என 9 எம்​எல்​ஏக்​கள் பழனி​சாமிக்கு கடிதம் அளித்​திருந்​தனர். இந்த சூழலில், ஒவ்​வொரு மாவட்​ட​மாக அழைத்​து, கட்சி வளர்ச்​சிப் பணி​கள் குறித்து பழனி​சாமி கேட்​டறிந்​தார்.

இக்​கூட்​டங்​களில் அதிருப்தி எம்​எல்​ஏக்​களான சி. வி.சண்​முகம், எஸ்​. பி.வேலுமணி, கே.பி.அன்​பழகன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​க​வில்​லை. இவர்​களு​டன் பேச்​சு​ நடத்​தி, இணக்​கமான சூழலை ஏற்​படுத்த பழனிசாமி திட்​ட​மிட்​டிருப்​ப​தாக அதி​முக வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன.

இதற்​கிடை​யில் ஆண்​டுக்கு 2 முறை நடத்த வேண்​டிய செயற்​குழுக் கூட்​டத்தை அடுத்த மாதம் நடத்த இருப்​ப​தாக​வும், அதில் கட்சி வளர்ச்​சிப் பணி​கள், அதிருப்தி நிர்​வாகி​களை சமா​தானம் செய்​வது, தவெக முதல் பட்​ஜெட் உள்​ளிட்​டவை குறித்து விவா​திக்க இருப்​ப​தாக​வும், தவெக அரசுக்கு கண்​டனம், மத்​தியஅரசுக்கு கோரிக்​கை, அதி​முக நிரந்தர பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி உள்​ளிட்ட தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட இருப்​ப​தாக​வும்​ கூறப்​படுகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here