த​யாரிப்​பாளரை மணக்​கிறார் நடிகை ஷர்​மிளா மந்த்ரே

0
12

தமிழில், வினய் நடித்த ‘மிரட்​டல்’ படத்​தில் நாயகி​யாக நடித்​தவர் ஷர்​மிளா மந்த்​ரே. கன்​னடத்​தில் சில படங்​களில் நடித்​துள்ள இவர், விமல் நடித்த ‘இவனுக்கு எங்​கேயோ மச்​சம் இருக்​கு’, ‘சண்​டக்​காரி’, தினேஷின் ‘நானும் சிங்​கிள்​தான்’ ஆகிய தமிழ்ப் படங்களைத் தயாரித்​துள்​ளார்.

இவருக்​கும் பிரபல தமிழ்ப் பட தயாரிப்​பாளர் பேஷன் ஸ்டூடியோஸ் சுதன் சுந்​தரத்​துக்​கும் திருமண நிச்​சய​தார்த்​தம் நடை​பெற்​றுள்​ளது. பெங்​களூரில் உள்ள நட்​சத்​திர ஓட்​டல் ஒன்​றில் நடை​பெற்ற இந்த விழா​வில் நெருங்​கிய உறவினர்​கள் மட்​டுமே கலந்து கொண்​டனர்.

திரு​மணத் தேதி இன்​னும் முடிவு செய்​யப்​பட​வில்லை என்று ஷர்மிளா தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. அவர்​களுக்​குக் கன்னட, தமிழ்த் திரைப்​படத் துறை​யினர் வாழ்த்​துகளைத் தெரிவித்து வருகின்​றனர்.

தயாரிப்​பாளர் சுதன் சுந்​தரம், விஜய் சேதுபதி நடித்த ‘மகா​ராஜா’, ஹரிஷ் கல்​யாண் நடித்த ‘பார்க்​கிங்’ உள்பட பல படங்​களைத் தயாரித்​துள்​ளார். இப்​போது, மிஸ்​டர் பாரத், பென்ஸ் உள்பட சில படங்​களைத் தயாரித்து வரு​கிறார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here