மலை​யாள இயக்​குநரை மணந்தார் நடிகை ரவீணா ரவி

0
24

பிரபல டப்​பிங் கலைஞர் ரவீணா ரவி, நடிகைகள் சமந்​தா, எமி ஜாக்​சன், காஜல் அகர்​வால் உள்பட பல கதா​நாயகி​களுக்கு தமிழ், மலை​யாளப் படங்​களில் பின்​னணி குரல் கொடுத்து வரு​கிறார்.

’ஒரு கிடா​யின் கருணை மனு’ படம் மூலம் நடிகை​யாக அறிமுகமான இவர், தொடர்ந்​து, ‘ராக்​கி’, ‘வீரமே வாகை சூடும்’, ‘லவ் டுடே’, ‘மாமன்​னன்’ உள்பட பல படங்​களில் நடித்​துள்​ளார். இவர், தேவன் ஜெயக்​கு​மார் இயக்​கிய ‘வாலாட்​டி’ என்ற மலையாளப் படத்​தில் டப்​பிங் பேசி​னார்.

அப்​போது இரு​வருக்​கும் இடையே காதல் மலர்ந்​தது. இதை 2024ம் ஆண்டு அக்​டோபரில் இரு​வரும் உறு​திப்​படுத்​தினர். இந்நிலையில், ரவீணா ரவி – தேவன் ஜெயக்​கு​மார் திரு​மணம் நேற்று முன்தினம் நடந்​தது. அவர்​கள் திரு​மணத்​துக்கு திரை பிரபலங்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர்.

திரு​மணத்​துக்கு பிறகும் ரவீணா நடிப்பு மற்​றும் டப்​பிங்​கில் தொடர்ந்து ஈடு​படு​வார். ரவீணா ரவி​யின் அம்மா ஸ்ரீஜா ரவி​யும் 1,500-க்​கும் மேற்​பட்ட படங்​களுக்கு டப்​பிங் பேசி​யுள்​ளார். பல திரைப்​படங்​களில் நடித்​தும் இருக்​கிறார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here