காவல் துறை சீருடையில் ரீல்ஸ் வெளியிட்ட 14 போலீஸார் மீது நடவடிக்கை

0
34

காவல் துறை சீருடை​யில் சமூக வலை​தளங்​களில் ரீல்ஸ் வெளி​யிட்​ட​தாக 14 போலீ​ஸார் மீது நட​வடிக்கை எடுக்க பரிந்​துரைக்​கப்​பட்​டுள்​ளது. காவலர்​கள் சீருடை​யில் ரீல்ஸ் வெளி​யிட கூடாது என்று ஏற்​கெனவே டிஜிபி உத்​தர​விட்டுள்​ளார்.

எனினும், சில காவலர்​கள் தொடர்ந்து சீருடை​யில் ரீல்ஸ் வெளி​யிட்டு வரு​கின்​றனர். இதையடுத்து, சமூக வலை​தளங்​களைக் கண்​காணித்து நட​வடிக்கை எடுக்க விசா​ரணைக் குழு அமைக்​கப்​பட்​டது.

இந்​தக் குழு​வினர் நடத்​திய ஆய்​வில், சென்​னை​யில் மட்​டும் சீருடை​யில் ரீல்ஸ் வெளி​யிட்ட 14 காவலர்​கள் கண்​டறியப்​பட்டு, அவர்​கள் மீது துறை ரீதி​யான நட​வடிக்கை எடுக்க பரிந்​துரைக்​கப்​பட்​டுள்​ளது.

இதில் சில காவலர்​கள் மீது ஏற்​கெனவே நட​வடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது. தொடர்ந்து சமூக வலை​தளங்​களைக் கண்​காணித்து, சீருடை​யில் ரீல்ஸ் வெளி​யிடும் காவலர்​களைக் கண்​டறிந்து நட​வடிக்கை எடுக்​கப்​படும் என்று சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ் எச்​சரித்​துள்​ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here