ஆதி சாய்குமார் கதாநாயகனாக நடிக்கும் படத்துக்கு ‘ஆதி ருத்ரா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதை திரிசூல் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் பிரசாந்த் ஜி. ருத்ரப்பா தயாரிக்கிறார். நவரசன் எழுதி இயக்கும் இப்படத்தின் கதை, 1960 முதல் 1990 வரையிலான காலகட்டத்தின் பின்னணியில் மர்மங்களையும், ஆன்மிகம் மற்றும் நம்பிக்கை சார்ந்த அம்சங்களையும் மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
பி.அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். ஏ.ஜெ. ஷெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி, மலையாளம் என 5 மொழிகளில் உருவாகும் இதன் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்க இருக்கிறது. இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்த கூடுதல் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் எனவும் மர்மம், பரபரப்பு, உணர்வுப்பூர்வமான தருணங்கள் என ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில் இப்படம் உருவாகவுள்ளது எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.














