கன்னிப் பெண் மவுனம் திருமணத்துக்கு சம்மதம்: தலிபான்கள் சட்டத் திருத்தத்தில் மாற்றம்

0
13

ஆப்​கனில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் அரசு பொறுப்​பேற்ற பிறகு பல்​வேறு கட்​டுப்​பாடு​களை விதித்து வருகின்​றனர். அதன் அடுத்த கட்​ட​மாக, ‘கணவன் – மனைவி பிரிவதற்​கான கொள்​கைகள்’ என்ற தலைப்​பில் தலிபான்கள் சட்டத் திருத்​தம் கொண்டு வந்​துள்​ளனர்.

அதற்கு ஆப்​கன் உச்ச தலை​வர் ஹிபத்​துல்லா அகுண்ட்​ஸடா கையெழுத்​திட்​டுள்​ளார். அந்த சட்​டத்​திருத்​தத்​தில், ‘‘ஆப்கானிஸ்தானில் கன்​னிப் பெண்​கள் மவுனம், திரு​மணத்​துக்கு சம்​மத​மாகக் கருதப்​படும். பெண் குழந்​தைகளின் திருமண விஷயத்​தில், பரு​வம் அடைந்த பிறகு, அதை ரத்து செய்​வதற்கு தலி​பான் நீதி​மன்​றங்​கள்​தான் முடி​வெடுக்​கும்’’ என்று கூறப்பட்டுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here