அதானி ஆலையில் 15,000 சிமெண்ட் மூட்டைகளில் 70 அடி உயர துர்கா தேவி!

0
22

அதானி சிமெண்ட் நிறு​வனம், ‘ஜஹான் விஸ்​வாஸ், வாஹன் சக்​தி’ என்​கிற பெயரில் நவராத்ரி மற்​றும் துர்கா பூஜை பண்​டிகை கொண்​டாடங்​களை தொடங்கி உள்​ளது. அதன் ஒரு பகு​தி​யாக மத்​திய பிரதேசத்​தில் உள்ள கைமோர் சிமெண்ட் உற்பத்தி ஆலை​யில் 15,000 சிமெண்ட் மூட்​டைகளைக் கொண்டு துர்கா தேவி​யின் உரு​வத்தை பிரம்​மாண்​ட​மாக உரு​வாக்கி உள்ளது.

70 அடி உயரம், 70 அடி அகலத்​தில் (4,900 சதுர அடி பரப்​பளவு) 750 டன் எடை கொண்ட 15,000 அம்​புஜா சிமெண்ட் மற்​றும் ஏசிசி சிமெண்ட் மூட்​டைகளை பயன்​படுத்தி இந்த கலைப்​படைப்பு உருவாக்​கப்​பட்​டுள்​ளது.

தரை​யில் இருந்து பார்க்​கும்​போது, மிகத் துல்லிய​மாக அடுக்​கப்​பட்ட தனித்​தனி அலகு​களாகக் காட்சியளிக்​கும் சிமெண்ட் மூட்​டைகள், ‘ஏரியல் வியூ’ என்று அழைக்​கப்​படும் வானில் இருந்து அல்​லது உயர​மான இடத்திலிருந்து பார்க்​கும்​போது, துர்கா தேவி​யின் பிரம்மாண்டமான வடிவ​மாக காட்​சி​யளிக்​கின்​றன.

இந்த கலைப்​படைப்பு உரு​வான பயணத்​தை​யும், அதன் பிரம்மிப்பான வான்​வழி காட்​சி​யை​யும் பின்​னணி இசை, உணர்வுப்​பூர்​வ​மான காட்சி அமைப்​பு​கள் உள்​ளிட்​ட​வற்​றுடன் ஒரு குறும்​படம் போல தயாரித்​து, அதானி சிமெண்ட் நிறு​வனம் சமூக வலைத்​தளங்​களில் வெளி​யிட்​டுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here