மார்த்தாண்டம்:  காரில் கடத்திய 2.2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

0
347

விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி அனிதா குமாரி, தனி எஸ் ஐ மைக்கேல் சுந்தர்ராஜன் ஆகியோர்  மார்த்தாண்டம் அருகே உள்ள ஐரேனிபுரம் பகுதியில் நேற்று (அக்.,24) வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்த முயன்ற போது நிற்காமல் சென்றது.

இதனை தொடர்ந்து வாகனத்தை துரத்தி சென்று சென்னித்தோட்டம் பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர். டிரைவர்  தப்பி ஓடிவிட்டார். காரை சோதனை செய்தபோது சுமார் 2 ஆயிரத்து 200 கிலோ பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர்  கார் கைப்பற்றப்பட்டு விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அரிசி காப்புக்காடு குடோனில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் விளவங்கோடு வட்டத்துக்குட்பட்ட பால விளை  பகுதியிலும் பொது இடத்தில் சுமார் 700 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அதுவும் பறிமுதல் செய்யப்பட்டது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here