புரோ கபடி லீக் இன்று தொடக்கம்

0
459

ஹைதராபாத்: புரோ கபடி லீக் 11-வது சீசனின் முதற்கட்ட போட்டிகள் ஹைதராபாத்தில் உள்ள கச்சிபவுலி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்தத் தொடரில் புனேரி பல்தான், முன்னாள் சாம்பியன்கள் பாட்னா பைரேட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், யு மும்பா, பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி மற்றும் தமிழ் தலைவாஸ், அரியானா ஸ்டீலர்ஸ், யுபி யோதாஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், தெலுகு டைட்டன்ஸ் ஆகிய 12 அணிகள் பங்கேற்கின்றன.

2-வது கட்ட போட்டிகள் நொய்டாவிலும், 3-வது கட்ட போட்டிகள் புனேவிலும் நடைபெறுகின்றன. டிசம்பர் 24-ம் தேதி வரை லீக் சுற்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் 22 ஆட்டத்தில் விளையாடும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

தொடக்க நாளான இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் – பெங்களுரூ புல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் டெல்லி -மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தமிழ் தலைவாஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் தெலுகு டைட்ன்ஸுடன் நாளை (19-ம் தேதி) மோதுகிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here