நாகர்கோவில்: வீட்டிற்குள் புகுந்த வடமாநில வாலிபருக்கு அடி உதை

0
468

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மேலராமன்புதூர் சைமன்நகரில் ஏராளமான வீடுகள் உள்ளன. நேற்று (30) வயதுடைய வாலிபர் ஒருவர் அங்குள்ள வீட்டின் சுவர் ஏறி குதித்துள்ளார். இதனை கவனித்த சிலர் திருடன், திருடன் என சத்தம் போட்டப்படி அவரை பிடிக்க முயன்றனர். உடனே சுதாரித்துக் கொண்ட வாலிபர், அங்கிருந்து மற்றொரு வீட்டிற்கு தாவி பதுங்கியுள்ளார்.

இதனால் பொதுமக்கள் சல்லடை போட்டு அங்கு தேடினர். ஒரு கட்டத்தில் வாலிபர் வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்து அவரை நையபுடைத்தனர். பின்னர் அவரை நேசமணி நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிடி பட்டவாலிபர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் அவர் தொடர்ந்து பேசியதால் அவரை எச்சரித்து ஊருக்கு செல்லும்படி அறிவுறுத்தினர். இதற்காக ரெயில் நிலையம் கொண்டு சென்று விட்டனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here