மாணவி கொலை விவகாரத்தில் அலட்சியம்: இன்ஸ்பெக்டருக்கு கட்டாய பணி ஓய்வு

0
22

தூத்​துக்​குடி மாவட்​டம் விளாத்தி​குளம் அருகே பிளஸ் 2 மாணவி, கடந்த மார்ச் 10-ம் தேதி பொதுத்​தேர்வு எழுதி​விட்டு வீடு திரும்​பினார். பின்​னர் மாலை​யில் இயற்கை உபாதை கழிக்க காட்​டுப் பகுதிக்கு சென்ற அவர் வீடு திரும்​பவில்லை.

இது​குறித்து புகார் அளிக்​கச் சென்ற அவரது பெற்​றோரை, குளத்​தூர் காவல் நிலை​யத்​தினர் விளாத்​தி​குளம் அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​துக்கு அனுப்​பினர். ஆனால், அங்​கிருந்த இன்ஸ்​பெக்​டர் பிரவீனா மற்​றும் போலீ​ஸார், மீண்​டும் குளத்​தூர் காவல் நிலை​யத்​துக்கு செல்​லுமாறு மாணவி​யின் பெற்​றோரை திருப்பி அனுப்பி அலைக்​கழித்​துள்​ளனர்.

மறுநாள் மாலை​யில், அங்​குள்ள காட்​டுப் பகுதி​யில் மாணவி பலாத்​காரம் செய்து, கொலை செய்​யப்​பட்ட நிலை​யில் கிடந்​தது தெரிய​வந்​தது. இந்த வழக்​கில், ராம​நாத​புரம் மாவட்​டம் சாயல்​குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரன் (37) என்​பவரை போலீ​ஸார் கைது செய்​தனர். இவ்​வழக்​கில், கடந்த மே 25-ம் தேதி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்​டனை விதிக்​கப்​பட்​டது.

இந்த வழக்​கில் காவல்​துறை​யின் அலட்​சி​யம் குறித்து, திருநெல்​வேலி சரக டிஐஜி திருநாவுக்​கரசு விசா​ரணை மேற்​கொண்​டார். இன்ஸ்​பெக்​டர் பிரவீனா கன்​னியாகுமரி மாவட்​டம் மணவாளக்​குறிச்சி காவல் நிலை​யத்​துக்கு பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டார். தொடர்ந்து, துறை ரீதி​யாக நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில், இன்ஸ்​பெக்​டர் பிரவீனா மீதான குற்​றச்​சாட்​டுகள் உறுதி செய்​யப்​பட்​டன. இதையடுத்து, அவருக்கு கட்​டாயபணி ஓய்வு அளித்து டிஐஜி திருநாவுக்​கரசு தற்​போது உத்​தர​விட்​டுள்​ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here