தக்கலை அருகே தனியார் பேருந்து மோதி பெண் செவிலியர் பலி!
தக்கலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த பிளாரன்ஸ் ஜாஸ்மின் (46), இரவு பணியை முடித்துவிட்டு இன்று காலை இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
பணவிளை சந்திப்பு அருகே வந்தபோது, தனியார் பேருந்து அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இரண்டு குழந்தைகளின் தாயான இவரது கணவர் ஸ்டாலின் பினு ஜோனி, இலவுவிளை தேவாலயத்தில் பாதிரியாராகப் பணிபுரிந்து வருகிறார்.
தற்போது விபத்தின் CCTV காட்சி வெளியாகி உள்ளது














