
இரவிபுதூர்கடையில் 3 பைக்குகள் அடுத்தடுத்து மோதல்: கல்லூரி மாணவர் பலி
குமரி மாவட்டம் சுவாமியாா்மடம் அருகே காட்டாத்துறை, திட்டுமேல்கோணம் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் காட்வின் (20). இவா், கோவையில் உள்ள கல்லூரியில் நா்சிங் 3 ஆம் ஆண்டு படித்து வந்தாா். தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த இவா், இரவிபுதூா்கடையிலிருந்து பள்ளியாடி நோக்கி இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, குருவிக்காடு பகுதியில் இருசக்கர வாகனமும், ஸ்கூட்டரும் இவரது இருசக்கர வாகனத்தின் மீது அடுத்தடுத்து மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த காட்வினை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா், காட்வின் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தாா்
இந்த விபத்தில், விபத்துக்குள்ளான இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த காஞ்சிரோடை சோ்ந்த ஜான்கிறிஸ்டோபா் (35), அவருடன் வந்த ஜோவிலின்ராஜ் (19), ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்த கிரேஷ்லின் (19), அவரது தாயாா் அரபிக்சோனியா (38) ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா். இது குறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.












