ஷேக் ஹசீனா வங்கதேசம் திரும்பினால் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்: அட்டர்னி ஜெனரல் எச்சரிக்கை

0
19

முன்​னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வங்​கதேசம் திரும்பினால் மரண தண்டனையை எதிர்​கொள்வார் என்று அந்நாட்​டின் அட்டர்னி ஜெனரல் முகமது அமினுல் இஸ்​லாம் தெரிவித்​துள்​ளார்.

வங்​கதேசத்​தில் கடந்த 2024-ம் ஆண்டு நடை​பெற்ற மாணவர்​கள் போராட்​டத்​தின்​போது மிகப்​பெரிய கலவரம் வெடித்​தது. இதன் காரண​மாக அன்​றைய பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியா​வில் தஞ்​சமடைந்​தார். வரும் டிசம்​பரில் அவர் வங்கதேசம் திரும்ப திட்​ட​மிட்டு உள்​ளார்.

இதற்​காக புதிய பாஸ்​போர்ட் வழங்கக் கோரி இந்​தி​யா​வில் உள்ள வங்​கதேச தூதரகத்துக்கு அவர் கடிதம் எழுதி உள்​ளார்.

ஆனால் அவருக்கு புதிய பாஸ்​போர்ட் வழங்க முடி​யாது, வங்​கதேச நீதி மன்றத்​தால் மரண தண்​டனை விதிக்​கப்​பட்ட அவரை, இந்​திய அரசு முறைப்​படி ஒப்​படைக்க வேண்​டும் என்று அந்த நாட்டு அரசு தெரி​வித்​துள்​ளது.

இந்த சூழலில் வங்​கதேச அட்​டர்னி ஜெனரல் முகமது அமினுல் இஸ்​லாம், தனி​யார் செய்தி நிறு​வனத்​துக்கு நேற்று அளித்த பேட்டி​யில், “வங்​கதேச நீதி​மன்​றத்​தால் மரண தண்​டனை விதிக்கப்​பட்ட ஹசீ​னா​வுக்கு புதிய பாஸ்​போர்ட் வழங்க முடி​யாது.

குற்றவாளி​கள் ஒப்​படைப்பு ஒப்​பந்​தத்​தின்​படி தன்னை வங்​கதேச அரசிடம் ஒப்​படைக்​கு​மாறு இந்​திய அரசிடம் அவர் முறை​யிட வேண்​டும். இந்த நடை​முறை​யின் மூலம் மட்​டுமே அவர் வங்கதேசத்​துக்கு திரும்ப முடி​யும். வங்​கதேசத்​துக்கு ஷேக் ஹசீனா திரும்​பி​னால் அவர் மரண தண்​டனையை எதிர்​கொள்​ள நேரிடும்​” என்​றார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here