நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டால் 2 நாளில் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க தயார்: ஈரான்

0
25

எங்​கள் நிபந்​தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டால் ஹார்முஸ் ஜலசந்தியை அடுத்த இரண்டே நாட்​களில் மீண்​டும் திறக்​கத் தயார் என ஈரான் வெளி​யுறவு அமைச்​சகம் அறி​வித்​துள்​ளது.

இது​குறித்து ஈரானிய வெளி​யுறவு அமைச்​சக செய்​தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய் கூறிய​தாவது: அமெரிக்​கா​வுடன் மத்​தி​யஸ்​தர்​கள் வழி​யாக சமரச பேச்சு​வார்த்தை நடந்து வருகிறது. போர் பதற்​றத்​தைத் தணிக்க முதன்மை கோரிக்கைகள் முன்​வைக்​கப்​பட்​டுள்​ளன. அதில் ஈரானின் எண்ணெய் துறை மீது விதிக்​கப்​பட்​டுள்ள தடைகளை நீக்குவதோடு, வெளி​நாடுகளில் முடக்கி வைக்​கப்​பட்​டுள்ள ஈரானிய சொத்​துகளை உடனே விடுவிக்க வேண்​டும்.

ஹார்​முஸ் ஜலசந்தி பகுதி​யில் அமெரிக்க கடற்​படை முற்றுகையைக் கைவிட வேண்​டும். பிராந்​தி​யத்​தில் உள்ள அமெரிக்​கப் படைகளின் எண்​ணிக்​கையைக் குறைக்க வேண்டும், ஓமன் நாட்​டின் ஒப்​புதலுடன் உரு​வாக்​கப்​பட்​டுள்ள புதிய போக்​கு​வரத்து வழித்​தடத்தை அமெரிக்கா அங்​கீகரிக்க வேண்​டும். இதுபோன்ற மிக முக்​கிய​மான கோரிக்​கைகளை முன்​வைத்​துள்​ளோம். இவற்றை அமெரிக்கா ஏற்​றுக் கொள்ளும்பட்சத்தில் 2 நாட்​களுக்​குள் ஹார்​முஸ் நீரிணையை திறக்க ஈரான் தயாராக உள்​ளது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here