‘எனது பெயரில் சமூக வலைதள மோசடி’ – நடிகை ரித்திகா சிங் எச்சரிக்கை

0
26

பேஸ்​புக்​கில் தனது பெயரில் போலியாக கணக்​குத் தொடங்கி பணம் வசூலித்து மோசடி செய்​து​வரு​வ​தாக நடிகை ரித்​திகா சிங் எச்​சரித்​துள்​ளார்.

இதுபற்றி அவர் வெளி​யிட்​டுள்ள வீடியோவில், “இன்ஸ்டாகிராமில் உள்ள எனது ஒரே அதி​காரப்​பூர்​வக் கணக்கு இது​தான். இதில் அனைத்து விஷயங்​களை​யும் நேரடி​யாக நானே பகிர்​கிறேன். ஆனால், ஃபேஸ்​புக்​கில் எனது பெயரில் ஒரு பக்​கம் தொடங்​கப்​பட்​டுள்​ளது. அவர்​கள் மாதம் ரூ.400 கட்​ட​ணத்​தில் ‘சப்​ஸ்கி​ரிப்​ஷன்’ முறையை நடத்தி வரு​கின்​றனர்.

மக்​களும் அதற்​காகப் பணம் செலுத்தி வரு​கின்​றனர். அது என்னை அவ​மதிக்​கும் அளவுக்​குச் சென்​றுள்​ளது. அதில் என்​னைப்​போலவே தோற்​றமளிக்​கும் அச்சு அசலாக உண்​மையானது போலத் தோன்​றும் ஏஐ வீடியோக்​களும் பரவலாகப் பரப்​பப்​பட்டு வரு​கின்​றன.

ஏஐ தொழில்​நுட்​பத்​தின் வளர்ச்சி நம்ப முடி​யாத அளவுக்கு ஆபத்​தானதாக மாறி​விட்​டது. தனிப்​பட்ட ஒரு​வரின் நற்​பெயரைக் குலைக்​கும் வகை​யி​லான வீடியோக்​கள் தற்​போது உரு​வாக்​கப்​படு​கின்​றன.

எனது குடும்​பத்​தினரோ அல்​லது நண்​பர்​களோ பார்த்​தால் கூட, அது நான் அல்ல என்​பதை அவர்​களால் கண்​டு​பிடிக்க முடி​யாத நிலை ஏற்​படலாம். இந்த உண்​மை​களை வெளிப்​படுத்​தவே இப்​போது முன்​வந்​துள்​ளேன்.

இதுபோன்ற பக்​கங்​கள் உங்​கள் கவனத்​துக்கு வந்​தால் தய​வுசெய்து அதை நம்ப வேண்​டாம், ‘சப்​ஸ்கி​ரிப்​ஷன்’ செய்ய வேண்​டாம். தய​வுசெய்து அந்​தப் பக்​கம் குறித்து புகாரளித்து, அதை அகற்ற உதவுங்​கள்” என்று தெரி​வித்​துள்​ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here