ஜெர்மனியில் தீவிரமடையும் ஜென்-ஸி போராட்டம்: பிராங்க்பர்ட்டில் கடைகள் சூறை, காவல் துறையினர் மீது தாக்குதல்

0
12

ஜெர்மனியில் ஜென்-ஸி போராட்டம் தீவிரமடைந்துள்ளதை அடுத்து நேற்று முன்​தினம் பிராங்​கபர்ட் நகரில் கடைகள் சூறை​யாடப்​பட்​டதுடன், காவல் துறை​யினர் மீது பெட்​ரோல் குண்​டுகளை வீசி​யும் போராட்​டக்​காரர்​கள் தாக்​குதல் நடத்​தினர்.

அத்​தி​யாவ​சிய பொருட்​களின் விலை உயர்வு, கல்வி மற்​றும் சுகாதா​ரத் துறைக்​கான நிதி ஒதுக்​கீடு குறைப்பு மற்​றும் கட்​டாய ராணுவ சேவை திட்​டத்​துக்கு எதிர்ப்பு தெரி​வித்து ஜெர்​மனி முழு​வதும் ஜென்-ஸி எனப்​படும் இளைய தலைமுறையைச் சேர்ந்த பல்​லாயிரக்​கணக்​கான இளைஞர்​கள் தீவிரப் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

நேற்று முன்​தினம் இரவு பிராங்க்​பர்ட் உள்​ளிட்ட சில நகரங்​களில் இந்​தப் போராட்​டம் வன்​முறை​யாக மாறியதில் கடைகள் சூறையாடப்​பட்​டன. காவல் துறை​யினர் மீது பெட்​ரோல் குண்டுகள் வீசி தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. ‘ஜென்-ஸி ரிகெல்ட்’ என்ற பெயரில் ஒருங்​கிணைக்​கப்​பட்டு வரும் இயக்​க​மானது பெர்லின், பிராங்க்​பர்ட், முனிச், ஹம்​பர்க் உட்​பட நாட்​டின் 34-க்கும் மேற்​பட்ட முக்​கிய நகரங்​களில் மிகப்​பெரிய பேரணிகளை நடத்தி வரு​கிறது.

கல்வி மற்​றும் சுகாதா​ரக் கட்​டமைப்​புக்கு அதிக நிதி ஒதுக்​குதல், பணவீக்​கத்​தால் உயர்ந்​துள்ள வாழ்​வாதா​ரச் செல​வு​களைக் கட்டுப்​படுத்​து​தல், மற்​றும் அரசாங்​கம் பரிசீலித்து வரும் கட்​டாய ராணுவச் சேவையை உடனடி​யாகக் கைவிடுதல் ஆகியவை இந்த இயக்​கத்​தில் உள்ள இளைஞர்​களின் முதன்​மையான கோரிக்கைகளாக உள்​ளன.

“நாங்​கள் அமைதிக்​கும் சுதந்​திரத்​துக்​குமே போராடு​கிறோமே தவிர, போருக்​கும் கட்​டாயத்​துக்​கும் அல்ல. கல்வி மற்​றும் சுகாதார அமைப்​புக்கு கூடுதல் ஆதரவு அளிக்​கப்​பட வேண்​டும்” என்று பெர்​லின் பேரணி​யில், அந்த இயக்​கத்​தின் செய்​தித் தொடர்பாளர் லினா பிரெட்​ரிக் தெரி​வித்​துள்​ளார். பெரும்​பாலான இடங்​களில் பகல் நேரத்​தில் அமைதி​யான முறை​யில் பேரணிகள் நடை​பெற்ற போதிலும், சனிக்​கிழமை இரவு பிராங்க்​பர்ட் நகர மையப் பகுதி​யில் பேரணி வன்​முறை​யாக மாறியது. நகரின் வணிக வளாகக் கண்​ணாடிகள் உடைக்​கப்​பட்டு, இரண்டு பெரிய கடைகள் முற்​றி​லுமாக சூறை​யாடப்​பட்​டன.

மேலும், பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டிருந்த காவல் துறை மற்றும் அவசரகால வாக​னங்​கள் மீது பெட்​ரோல் குண்​டுகள் மற்றும் பட்​டாசுகள் வீசி தாக்​குதல் நடத்​தப்​பட்​டது.

ஹம்​பர்க் நகரில் சாலைத் தடுப்​பு​களுக்கு தீ வைக்​கப்​பட்ட நிலை​யில், கொலோன் பகுதி​யில் வன்​முறையைக் கட்​டுப்​படுத்த காவல் துறை​யினர் நீரைப் பீச்​சி​யடிக்​கும் வாக​னங்​களைப் பயன்படுத்தினர்.

இளைஞர்​களின் போராட்​டங்​களைத் தீவிர இடதுசாரி அமைப்புகளும், வெளி​நாட்​டுத் தீவிர​வாத ஆதரவுக் குழுக்​களும் தங்​கள் ஆதாயத்​துக்​காகப் பயன்​படுத்த முயற்​சிப்​ப​தாக ஜெர்மனி உள்​துறை அமைச்​சகம் எச்​சரித்​துள்​ளது.

பிரான்ஸ், செர்பியா போன்ற ஐரோப்​பிய நாடுகளில் இளைஞர்​கள் முன்னெடுத்து வரும் வரிசையான அரசு எதிர்ப்​புப் போராட்டங்களின் தொடர்ச்​சி​யாகவே ஜெர்​மனி​யிலும் இந்த ஜென்-ஸி போராட்​டம் வெடித்​துள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here