எம்சிசி-முருகப்பா கோப்பை ஹாக்கி தொடர்: ரயில்வே, கடற்படை அணிகள் அரை இறுதிக்கு முன்னேற்றம்

0
27

97-வது அகில இந்​திய எம்​சிசி-முருகப்பா தங்​கக் கோப்பை ஹாக்கி தொடர் சென்னை எழும்​பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்​ணன் விளை​யாட்​டரங்​கில் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று ‘ஏ’ பிரி​வில் நடை​பெற்ற கடைசி லீக் ஆட்​டத்​தில் இந்​தி​யன் ரயில்​வேஸ் – பஞ்​சாப் நேஷனல் வங்கி அணிகள் மோதின. இந்த ஆட்​டம் 4-4 என்ற கோல் கணக்​கில் டிரா ஆனது.

ரயில்வே அணி தரப்​பில் ஷிஷே கவுடா 2 கோல்​களும் (26, 28-வது நிமிடங்​கள்), லவ்​பிரீத் சிங் (31-வது நிமிடம்), ஜஸ்​விந்​தர் சிங் (47-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்​தனர். பஞ்​சாப் நேஷனல் வங்கி அணி சார்​பில் நவீன் அன்​டில் 3 கோல்​களும் (57, 59, 60-வது நிமிடங்​கள்), குர்​சிம்​ரன் சிங் (11-வது நிமிடம்) ஒரு கோலும் அடித்​தனர்.

‘பி’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் இந்​திய கடற்​படை அணி 4-2 என்ற கோல் கணக்​கில் மலேசியா ஜூனியர் அணியை வீழ்த்​தி​யது. இந்​திய கடற்​படை அணி சார்​பில் பவின் குஷலப்பா (8-வது நிமிடம்), செல்​வ​ராஜ் (30-வது நிமிடம்), பவன் ராஜ்​பர் (36-வது நிமிடம்), நிதேஷ் (43-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்​தனர்.

லீக் சுற்​றுகளின் முடி​வில் ‘ஏ’ பிரி​வில் ரயில்வே அணி 4 ஆட்​டங்​களில் 3 வெற்றி, ஒரு டிரா​வுடன் 10 புள்​ளி​களை பெற்று தனது பிரி​வில் முதலிடம் பிடித்து அரை இறுதிக்கு முன்​னேறியது. இதே பிரி​வில் இந்​திய ராணுவம் அணி ஒரு வெற்றி, 2 டிரா, ஒரு தோல்​வியுடன் 5 புள்​ளி​கள் பெற்று 2-வது இடம் பிடித்து அரை இறுதி சுற்​றில் கால் பதித்​தது. ‘பி’ பிரி​வில் பாரத் பெட்​ரோலியம் கார்ப்​பரேஷன் லிமிடெட் அணி 4 ஆட்​டங்​களில் 3 வெற்றி, ஒரு டிரா​வுடன் 10 புள்​ளி​கள் பெற்று முதலிடம் பிடித்து அரை இறுதி​யில் நுழைந்​தது. இந்​திய கடற்​படை அணி 4 ஆட்​டங்​களில் 2 வெற்றி, 2 டிரா​வுடன் 8 புள்​ளி​கள் பெற்று 2-வது இடம் பிடித்து

அரை இறுதிக்கு முன்​னேறியது.

இன்று ஓய்வு நாளாகும். நாளை (31-ம் தேதி) மாலை 4 மணிக்கு நடை​பெறும் முதல் அரை இறுதி ஆட்​டத்​தில் இந்​தி​யன் ரயில்வே – இந்​திய கடற்​படை அணிகள் மோதுகின்​றன. 6 மணிக்கு நடை​பெறும் 2-வது அரை இறுதியில் பாரத் பெட்​ரோலியம் கார்ப்​பரேஷன் லிமிடெட் அணி, இந்​திய ராணுவ அணியை எதிர்​கொள்​கிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here