இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் நவம்பர் 4-ல் தொடங்குகிறது. இந்நிலையில் இந்தத் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணா காயம் அடைந்துள்ளார்.
தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து அவர், குணமடையவில்லை அவருக்கு வரும் 1 மற்றும் 2-ம் தேதிகளில் பெங்களூருவில் உள்ள பிசிசிஐ உயர் சிறப்பு மையத்தில் உடற்தகுதி சோதனை நடத்தப்பட உள்ளது.
இதனால் ஒருநாள் போட்டித் தொடரில் பிரசித் கிருஷ்ணா விலகக்கூடும் எனவும், அவருக்கு பதிலாக அகிப் நபி சேர்க்கப்படக்கூடும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.














