ரூ.20-க்கு கச்சோரி சாப்பிட சென்ற தொழிலதிபர் ரூ.20 லட்சம் இழந்தார்

0
29

ராஜஸ்​தான் மாநிலம், ஜெய்ப்​பூரில், நேற்று முன்தினம் மாலை சம்​பாலால் என்ற தொழிலதிபர் ரூ.20 மதிப்பிலான கச்சோரி சாப்​பிடு​வதற்​காக தனது ஸ்கூட்​டரை நிறுத்​தி​னார். அப்​போது, ரூ.20 லட்​சம் பணம் வைத்​திருந்த பையை ஸ்கூட்​டரின் முன்​புறத்​தில் வைத்​து​விட்டு அவர் கச்சோரி சாப்​பிட்​டுக் கொண்​டிருந்​தார்.

அந்​தச் சமயத்​தில் மற்​றொரு ஸ்கூட்​டரில் வந்த இரு​வர், பணம் இருந்த பையைத் திருடிக்​கொண்டு தப்​பிச் சென்​றனர். இச்​சம்​பவம் அப்​பகு​தி​யில் பொருத்​தப்​பட்​டிருந்த கண்​காணிப்பு கேமராக்​களில் பதி​வாகி​யுள்​ளது. இது சமூக வலை​தளங்​களில் வைரலாகி உள்​ளது. சம்​பாலால் தனது ஸ்கூட்​டரில் அமர்ந்து கச்சோரி சாப்​பிட்​டுக் கொண்​டிருப்​பது தெரி​கிறது.

அப்​போது மற்​றொரு ஸ்கூட்​டரில் வந்த இரு​வர் அவருக்கு அரு​கில் நிற்​கின்​றனர். பின்​னால் அமர்ந்​திருந்த நபர், பணம் வைத்​திருந்த பையை விரை​வாகப் பறித்​துக்​கொண்டு தப்​பிச் செல்​கிறார். இதைக் கண்டு அதிர்ச்​சி​யடைந்த சம்​பாலால், கையில் கச்​சோரியை வைத்​துக்​கொண்டே திருடர்​களைப் பிடிக்க ஓடினார். ஆனால், அவரால் திருடர்​களைப் பிடிக்க முடிய​வில்​லை.

தலைக்​கவசம் அணிந்​திருந்த இரு​வரை​யும் அடை​யாளம் காண்​ப​தற்​காக, அப்​பகு​தி​யில் உள்ள கண்​காணிப்பு கேமரா காட்​சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்​றனர். சம்​பாலால் அளித்த புகாரின் அடிப்​படை​யில், நஹர்​கர் காவல் நிலைய போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here