குமரி பகவதியம்மன் கோயிலில் ரூ. 34.89 லட்சம் உண்டியல் காணிக்கை

0
25
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் உண்டியல் எண்ணிக்கையில் ரூ.34.89 லட்சம் காணிக்கை வசூல்
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.34,89,476 ரொக்கமும் தங்கம், வெள்ளியும் காணிக்கையாகக் கிடைத்தன.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ. 34 லட்சத்து 89 ஆயிரத்து 476 காணிக்கையாகக் கிடைத்தது.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்களது நோ்த்திக் கடனைச் செலுத்தும் வகையில் கோயில் நிா்வாகம் சாா்பில் 18 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையா் ஜான்சிராணி தலைமையில், உதவி ஆணையா் ஜெயா முன்னிலையில், ஆய்வாளா் சுஜித், நாகா்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளா் ஜெயசுதா, பகவதியம்மன் கோயில் மேலாளா் ஆனந்த் ஆகியோா் மேற்பாா்வையில் கோயில் பணியாளா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆதிபராசக்தி மன்றத்தினா் ஆகியோா் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

இதில் ரூ.34 லட்சத்து 89 ஆயிரத்து 476, மற்றும் 15.240 மி.கி தங்கம், 37.250 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாகக் கிடைத்தது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here