சென்​னை​யில்​ சோழா செஸ் போட்டி: கங்​குலி, மென்​டோன்கா பங்​கேற்பு

0
26

சென்​னை​யில் அக்​டோபர் 30-ம் தேதி முதல் தொடங்​கவுள்ள முதலா​வது சோழா செஸ் ஓபன் சர்​வ​தேச கிராண்ட்​மாஸ்​டர்ஸ் செஸ் போட்​டி​யில் 32 கிராண்ட்​மாஸ்​டர்​கள் உட்​பட 80 வீரர், வீராங்​க​னைகள் கலந்​து​கொண்டு விளை​யாட​வுள்​ளனர்.

8 நாட்​கள் நடை​பெறவுள்ள இப்​போட்​டி​யில் இந்​திய கிராண்ட்​மாஸ்​டர்​கள் சூர்​யசேகர் கங்​குலி, லியான் லூக் மென்​டோன்கா, கிரீஸ் கிராண்ட்​மாஸ்​டர் டிமிட்​ரிஸ் அலெக்​சாகிஸ் உள்​ளிட்ட 32 கிராண்ட்​மாஸ்​டர்​கள் கலந்​து​கொள்​ளவுள்​ளனர். இதில் 20 கிராண்ட்​மாஸ்​டர்​கள் இந்​தி​யாவைச் சேர்ந்​தவர்​கள். மீதமுள்ள 12 பேர் வெளி​நாட்டு வீரர்​கள் ஆவர்.

ஃபிடே ரேட்​டிங்​கில் 2,250 புள்​ளி​களுக்கு மேல் பெற்​றவர்​கள் மட்டுமே இந்​தப் போட்​டி​யில் பங்​கேற்​கவுள்​ளனர். இதில் 75 பேர் ஏற்கெனவே ஃபிடே பட்​டத்தை வென்​றவர்​கள் என்​பது குறிப்பிடத்தக்கது.

12 செஸ் சம்​மேளனனங்​களை சேர்ந்​தவர்​கள் போட்​டி​யில் கலந்​து​கொண்டு விளை​யாட உள்​ளனர். இதில் 20 முதல் 24 பேர் வெளி​நாடுகளைச் சேர்ந்​தவர்​கள்.

இந்​தப் போட்​டி​யில் பங்​கேற்று புள்​ளி​களைப் பெறு​வதன் மூலம் கிராண்ட்​மாஸ்​டர் (ஜிஎம்), சர்​வ​தேச மாஸ்​டர் (ஐஎம்), மகளிர் கிராண்ட்​மாஸ்​டர் (டபிள்​யூஜிஎம்), மகளிர் சர்​வ​தேச மாஸ்​டர் (டபிள்​யூஐஎம்) அந்​தஸ்​தைப் பெறு​வதற்​கான வாய்ப்பு வீரர், வீராங்​க​னைகளுக்கு கிடைக்க உள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here