ஐரோப்பிய நாடுகளில் தொடரும் வன்முறைப் போராட்டம்: பிரான்சில் 1000 பேர் கைது

0
24

விலைவாசி உயர்வு, வீட்​டுவசதி தட்​டுப்​பாடு, சீரழிந்து வரும் பொதுச்​சேவை​கள் மற்​றும் அரசின் பொருளாதா​ரக் கொள்கைகளுக்கு எதிராக பிரான்ஸ், இத்​தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், அல்​பேனியா, பெல்​ஜியம் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் 2 வாரங்களுக்கு மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் லட்சக் கணக்கானோர் வீதி​களில் திரண்டு பேரணி நடத்​தினர். பகலில் அமைதி​யாகத் தொடங்​கிய போராட்டங்​கள் மாலை​யில் கல​வர​மாக மாறின. பிரான்ஸ் உள்​துறை அமைச்​சக தகவலின்​படி 4.10 லட்​சம் பேரும், தொழிற்​சங்கங்​கள் கூற்​றுப்​படி 8 லட்​சம் பேரும் சனிக்​கிழமைப் போராட்டத்​தில் பங்​கேற்​றனர். நிலை​மையைக் கட்​டுப்​படுத்த 70,000 போலீசார் குவிக்​கப்​பட்​டனர்.

பாரி​ஸில் போர்ட் டி இத்​தாலி​யி​லிருந்து போர்ட் டி வின்சென்னெஸ் வரை நடந்த பேரணி​யின் இறுதி​யில் வன்​முறை வெடித்​தது.

போலீசார் தடியடி, கண்​ணீர்ப்​புகை மற்​றும் தண்ணீரைப் பீச்​சி​யடித்​துக் கூட்​டத்​தைக் கலைத்​தனர். பிரான்ஸ் முழுவதும் இது​வரை 1,000 பேர் கைது செய்​யப்​பட்​டு உள்​ளனர்.

இத்​தாலி: மிலன், ரோம், துரின் ஆகிய நகரங்​களில் இளைஞர்களும் மாணவர்​களும் திரளாகப் போராட்​டத்​தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஏற்​கெனவே இருந்த நூற்​றுக்​கணக்கான வீரர்​களு​டன் கூடுதலாக 500 ராணுவ வீரர்​களைப் பிரதமர் ஜார்​ஜியா மெலோனி களமிறக்​கி​யுள்​ளார்.

ஸ்பெயின்: பார்​சிலோனா வின் பிளாக்கா டி கட்​டலூனியா சதுக்கத்​தில் கருப்பு உடை மற்​றும் முகமூடி அணிந்த கும்​பல் 14 க்கும் மேற்​பட்ட கடைகளின் கண்​ணாடிகளை உடைத்து பொருட்களைக் கொள்​ளை​யடித்​தது. வன்முறையில் ஈடுபட்டதாக நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

போர்ச்​சுகல்: லிஸ்​பன் உள்​ளிட்ட நகரங்​களில் வாடகை உயர்வு மற்​றும் நில உரிமையாளர்​கள் எளிதாகக் குடி​யிருப்​பாளர்​களை வெளியேற்​றும் சட்​டத்​திற்கு எதிராக ஆயிரக்​கணக்​கானோர் பேரணி நடத்​தினர்.

அல்​பேனியா: தலைநகர் திரானாவில் கல்​விக்​கட்​ட​ணக் குறைப்பு மற்​றும் பிரதமர் எடி ராமா ராஜினாமா செய்​யக் கோரி மாணவர்கள் நடத்​திய போராட்​டத்​தில் கற்​கள் வீசப்​பட்​ட​தால் 2,500-க்​கும் மேற்​பட்ட போலீசார் கண்​ணீர்ப்​புகை மற்​றும் தண்ணீரைப் பீச்​சி​யடித்​தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here