குடும்ப த்ரில்லர் கதையில் சசிகுமார்

0
28

கன்​னட இயக்​குநர் ஹரி சந்​தோஷ் இயக்​கும் த்​ரில்​லர் படத்​தில் சசிகுமார் கதாநாயக​னாக நடிக்​கிறார். இதில் சுவாசிகா, நந்​திதா ஸ்வேதா, அஞ்​சலி நாயர், நரேன், ஹரிஷங்​கர், ஹரீஷ் பெரேடி, தேனப்​பன், வையாபுரி, ஆனந்த் நாக் முக்​கிய கதாபாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர். ஜிப்​ரான் இசையைமக்​கும் இப்​படத்​துக்கு அர​விந்த் சிங் ஒளிப்​ப​திவு செய்​கிறார்.

டிரைடென்ட் ஆர்ட்ஸ் மற்​றும் 6 டைமன்​ஷன்ஸ் பிலிம்ஸ் மற்​றும் மீடியா எல் எல் பி நிறு​வனங்​கள் சார்​பில் சுல்​தான் ஜசானி, சேத்​தன் தியோலேகர் ஆகியோரோடு இணைந்து ஆர்.ரவீந்​திரன் தயாரிக்​கிறார். இதன் படப்​பி​டிப்பு சென்​னை​யில் தொடங்கி உள்​ளது. இப்​படம் பற்றி இயக்​குநர் ஹரி சந்​தோஷ் கூறும்​போது, “இது புது​மையான குடும்ப த்​ரில்​லர் வகையைச் சேர்ந்த கதை. பார்​வை​யாளர்​களுக்கு நிச்​சயம் புதிய அனுபவத்​தைக் கொடுக்​கும்” என்​றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here