“ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது” – டொனால்ட் ட்ரம்ப்

0
29

ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அக்டோபர் மாதத்தில் ஹார்முஸ் பகுதியில் வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாக கடல்சார் பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ட்ரம்ப், “நாம் எதை விரும்புகிறோமோ அதை அடைகிறோம். ஹார்முஸ் ஜலசந்தி என்பது முற்றிலும் எங்களுக்கு சொந்தமானது” என்று கூறினார். மேலும், தாங்கள் நினைத்தால் அந்த பிராந்தியத்தின் எண்ணெய் வளங்களையும், நாட்டின் பகுதியையும் கையகப்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் போர் தொடங்கியதில் இருந்து, இந்தப் பகுதியில் கப்பல் போக்குவரத்தில் சிக்கல்கள் நிலவி வருகின்றன.

கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில்ஹார்முஸ் ஜலசந்தி வழியே பயணித்த 7 எண்ணெய் டேங்கர் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. ஈரான் போர் தொடங்கிய பிறகு ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான கப்பல்கள் சேதமடைந்தது இதுவே முதன்முறை என கூறப்படுகிறது. தங்களுடைய அனுமதியோ அல்லது ஒருங்கிணைப்போ இன்றி எந்தவொரு கப்பலும் இந்தப் பாதையைக் கடக்கக் கூடாது என்றும், மீறினால் தாக்குதல்கள் தீவிரமாக்கப்படும் என்றும் ஈரானின் புரட்சிகர காவல்படை எச்சரித்துள்ளது.

கடல்சார் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வரும் வாஷிங்டன் திங்க் டேங்க் தரவுகளின்படி, கடந்த 201-ம் ஆண்டுக்குப் பிறகு வர்த்தகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட மிக அதிகமான தாக்குதல்கள் இந்த அக்டோபர் மாதத்தில்தான் பதிவாகியுள்ளன. இதுகுறித்து மூத்த ஆய்வாளர் நோவாம் ராய்டன் கூறுகையில், ஹார்முஸ் பகுதியில் அதிக கப்பல் தாக்குதல்கள் நடந்த மாதமாக இந்த அக்டோபர் பதிவாகியுள்ளது என்றார். பிரிட்டன் கடற்படை வர்த்தகப் போக்குவரத்துப் பிரிவும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதை உறுதி செய்துள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here