கடன் தொல்லையால் 3 மாத பெண் குழந்தையை சாலையில் விட்டுச் சென்ற பெண் – போலீஸ் விசாரணை

0
22

கடன் தொல்லையால் 3 மாத பெண் குழந்தையை சாலையில் விட்டுச் சென்ற பெண்ணால், கரூர் உழவர் சந்தை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் உழவர் சந்தை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (28). இவர் மனைவி சீதாலட்சுமி (24). இவர்களுக்கு லட்சனா (6), தமிழினி (2), சஷ்டிகா என்ற 3 மாத பெண் குழந்தைகள் உள்ளன. முதல் குழந்தையான லட்சனாவை சீதாலட்சுமியின் தாயும், 2-வது குழந்தை தமிழினியை அவரது சகோதரி பிரவீணாவும் வளர்த்து வருகின்றனர். 3 மாதமான 3-வது பெண் குழந்தை சஷ்டிகா சீதாலட்சுமியிடம் வளர்கிறது.

கார்த்தி, காய்கறி வியாபாரம் உள்ளிட்ட சிறு சிறு வேலைகள் செய்து வருகிறார். தம்பதியினர் தனியார் நிதி நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் என பல இடங்களில் கடன் பெற்றுவிட்டு கடன் தவணைகளை முறையாக செலுத்துவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே, கடன் தவணையை திரும்பச் செலுத்தக் கூறி பலரும் நெருக்கடி அளித்து வந்துள்ளனர். மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்தவர்கள் கடன் தவணையை நேற்றிரவு கேட்டுள்ளனர். கடன் தவணையை இன்று (அக்.23ம் தேதி) கட்ட வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சீதாலட்சுமி, கரூர் உழவர் சந்தையில் இருந்து பழைய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் 3 மாத பெண் குழந்தையை கிடத்தி விட்டு கிளம்பி சென்றுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள், சீதாலட்சுமியை தடுத்து நிறுத்தி குழந்தையை அவரிடம் ஒப்படைத்து குழந்தைகள் பாதுகாப்பு ஹெல்ப் லைன் 1098-க்கு தகவல் அளித்துள்ளனர்.

இதையடுத்து கரூர் நகர போலீஸார் பாதுகாப்புக்காக அங்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அங்கு வந்த அலுவலர் சங்கீதா விசாரணைக்காக சீதாலட்சுமியை குழந்தைகள் பாதுகாப்பு உதவி மையத்திற்கு அழைத்து சென்றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here