சொந்த நாட்டின் மீது நம்பிக்கை இல்லாமல் வெளிநாடுகளில் கு

0
18

பாகிஸ்தானின் அரசு உயர் அதி​காரி​கள் சொந்த நாட்​டின் மீது நம்​பிக்​கையை இழந்து வெளி​நாடுகளில் குடியேறி வரு​வ​தாக தகவல் வெளியாகி உள்​ளது.

பாகிஸ்தானில் ஜனநாயக முறை​யில் தேர்வு செய்​யப்​பட்ட அரசு இருந்​தா​லும், அதன் அதி​காரத்​துவ அமைப்​பு​கள் அந்​நாட்டு ராணுவத்​தின் பெரும் நிழலின் கீழ் இயங்​கு​கின்​றன. வரலாற்று ரீதி​யாக ராணுவம் அரசின் ஒரு முக்​கியப் பங்​குதா​ரராகவும், பல சமயங்​களில் நாட்​டின் அரசி​யல் அமைப்​பில் ஒரு முதன்மை சக்தியாகவும் இருந்து வந்​துள்​ளன. இந்த சூழலில் பாகிஸ்தானின் ஆட்சி நிர்​வாகத்​தில் ராணுவத் தளபதி அசிம் முனீரின் செல்வாக்கு அதி​கரித்து வரு​வ​தாக அண்​மைக் காலமாக செய்திகள் வந்த வண்​ணம் உள்​ளன.

இந்​நிலை​யில், பாகிஸ்தானின் ஆளும் வர்க்​கத்​தினர் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்​பின் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட அரசின் மீது நம்​பிக்​கையை இழந்து, அண்டை நாடுகளில் குடிபெயர்ந்து வரு​வ​தாக தகவல் வெளியாகி உள்​ளது. இது​குறித்து பாகிஸ்தானின் பாது​காப்பு அமைச்​சர் கவாஜா ஆசிப் மிகுந்த கவலையை வெளிப்​படுத்​தி​யுள்​ளார்.

இது தொடர்​பாக அவர் எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறியுள்​ள​தாவது: கடந்த பல ஆண்​டுகளாக பாகிஸ்​தான் அரசு நிர்​வாகத்​தில் உள்ள பல அதி​காரி​கள் கனடா, அமெரிக்கா, இங்​கிலாந்து மற்​றும் பிற ஐரோப்​பிய நாடுகளைத் தங்​கள் நிரந்​தர வசிப்​பிடங்​களாக ஆக்​கிக்​கொண்​டனர். அதி​காரி​களின் விருப்​பமான இடங்​களில் ஒன்​றாக போர்ச்​சுகல் உரு​வெடுத்​துள்​ளது. அவர்​கள் (அதி​காரி​கள்) பாகிஸ்​தான் அரசில் பணி​யாற்​றியபோது, ​​ஒரு திட்​டத்​தின் கீழ் இதற்​காகத் தயாரானார்​கள்.

இது, அவர்​களின் பத​விக்​காலத்​தில் தாய்​நாட்​டின் மீதும் தங்​கள் பத​வி​களின் மீதும் அவர்​கள் கொண்​டிருந்த அர்ப்​பணிப்பு குறித்து கேள்​வி​களை எழுப்​பு​கிறது. மேலும், அரசி​யல்​வாதி​களின் ஆதரவைப் பெற்​றுக்​கொண்டே, சட்​டபூர்​வ​மான மற்​றும் சட்​ட​விரோத​மான வழிகள் இரண்​டின் மூலமும் செல்​வம் குவிப்​ப​தற்​கான வாய்ப்​பு​களை அனுபவித்த அதி​காரி​களின் நடத்​தையும் பல சந்​தேகங்​களை எழுப்​பு​கிறது.

வெளி​நாடுகளில் குடிபெயர்ந்த அதி​காரி​கள் முக்​கிய பத​வி​களை வகித்​தவர்​கள். அடுத்​தடுத்து வந்த அரசுகளுக்கு நெருக்​க​மானவர்களாக இருந்​தவர்​கள். இந்த அதி​காரி​களுக்கு நிரந்​தர வசிப்​பிட ஏற்​பாடுகளைச் செய்து கொடுத்த நபர், அவர்​களிடமிருந்து கணிசமான தொகையைப் பெற்​றுக்​கொண்டு தப்பி ஓடி​விட்​டார். இவ்வாறு அவர் கூறினார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here