
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்குள் மழை நீர் புகுத்த விவகாரத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய 1 வார்டு கவுன்சிலருக்கு சொந்தமான உணவகம், கார் பார்க்கிங் மற்றும் கழிப்பிடத்தில் இருந்து வரும் கழிவுநீர் அனைத்தும் மழைநீர் வடிகாலில் தான் கலக்க படுகிறது என குற்றம்சட்டிய பக்தர் ஒருவர் இவர்கள் அனைவரும் முதலில் மழைநீர் ஓடையில் கழிவுநீரை நேரடியாக கலப்பதை நிறுத்த வேண்டும். அப்பொழுது தான் இது போன்ற தர்ம சங்கடமான நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க முடியும் என கூறினார்.
அதிகாரிகள் மழை நீர் வடிகால் ஓடைகளில் நேரடியாக கலக்க படும் கழிவுநீரை கண்காணிக்க வேண்டும். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டனர்.













