சிஜேபி நிர்வாகிகள் விடுதலை ஆனதும் அடுத்தகட்ட போராட்டம்: அபிஜித் திப்கே அறிவிப்பு

0
24

இந்​திய தேர்​தல் ஆணை​யத்​தின் சிறப்பு தீவிர திருத்த நட​வடிக்​கைக்கு (எஸ்ஐஆர்) எதிராக டெல்​லி​யில் போராட்​டங்​கள் வலுத்து வரும் நிலை​யில், கரப்​பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறு​வனத் தலை​வர் அபி​ஜித் திப்கே அடுத்​தகட்ட போராட்​டம் குறித்து விரைவில் அறி​விப்​போம் என்று தெரி​வித்​துள்​ளார்.

இது​குறித்து அவர் நேற்று செய்​தி​யாளர்​களிடம் பேசுகை​யில், “நீதி​மன்​றக் காவலில் வைக்​கப்​பட்​டுள்ள எங்​கள் அமைப்​பின் உறுப்​பினர்​களான சவுரவ் தாஸ் மற்​றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் விடுவிக்​கப்​பட்ட பிறகு, அனைவரும் கூடி அடுத்​தகட்ட போராட்டம் நடத்​து​வது குறித்து முடிவு செய்​யப்​படும்.

நாங்​கள் யாருக்​கும் அஞ்​ச​மாட்​டோம்; பின்​வாங்​கவும் மாட்​டோம்” என்​றார். அக்​டோபர் 16 வெள்​ளிக்​கிழமை மாலை 5 மணிக்கு ‘லேரா தோ திரங்கா’ பேரணிக்கு அபி​ஜித் திப்கே அழைப்பு விடுத்​திருந்​தார்.

பேரணிக்​குச் சில மணி நேரங்​களுக்கு முன்​பாக, அதில் பங்​கேற்​கக் கூடாது என டெல்லி காவல் துறை அவருக்கு நோட்​டீஸ் அனுப்பியது.

எனினும், வெள்​ளிக்​கிழமை மாலை கன்​னாட் பிளேஸ் பகுதிக்கு புறப்​பட்ட திப்கே, காவல் துறை​யின​ரால் தடுப்​புக் காவலில் எடுக்​கப்​பட்டு கைது செய்​யப்​பட்​டார். அதன்​பின், சனிக்​கிழமை அவருக்கு நிபந்​தனை ஜாமீன் வழங்​கப்​பட்​டது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here