தாய் குணமடைந்​த​தால் 12 ஜோதிர்லிங்கங்களுக்கு ஓடிச் சென்று நேர்த்திக்கடன் – இதுவரை 8,000 கி.மீ கடந்த பிஹார் இளைஞர்!

0
25

பிஹாரைச் சேர்ந்த இளைஞர் ஒரு​வர் தனது தாய் கடுமை​யான நோயி​லிருந்து குணமடைந்​த​தால் இந்​தியா முழுவதும் உள்ள 12 ஜோதிர்​லிங்​கத் தலங்​களுக்கு ஓடிச் சென்று நேர்த்திக்கடன் நிறைவேற்றி வரு​கிறார். பிஹார் மாநிலம் அராரியா மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் 19 வயதான மோனு மேதுர்​பாலா. இவரது தாய் கடுமை​யான நோய் பாதிப்​புக்கு ஆளாகி இருந்​த​தாக தெரி​கிறது.

தனது தாய் குணமடைந்​தால் இந்​தியா முழு​வதும் உள்ள 12 ஜோதிர்​லிங்​கத் தலங்​களை​யும் ஓடிச் சென்று தரிசனம் செய்து நேர்த்​திக்​கடன் செலுத்​து​வேன் என மோனு வேண்​டிக் கொண்டுள்ளார். அதன்​படி மோனு​வின் தாய் கடுமை​யான நோயிலிருந்து குணமடைந்​ததைத் தொடர்ந்​து, அவர் தற்​போது தனது நேர்த்​திக்​கடனை நிறைவேற்றி வரு​கிறார்.

கடந்த மார்ச் 15-ம் தேதி தனது ஆன்​மிகப் பயணத்​தைத் தொடங்கினார். தின​மும் சுமார் 50 கிலோமீட்​டர் தூரம் ஓடி வரும் அவர், இது​வரை சுமார் 8,000 கிலோமீட்​டர் தூரத்​தைக் கடந்துள்ளார். மோனு​வின் இந்த ஆன்​மிகப் பயணம் தொடர்​பான வீடியோக்​கள் சமூக வலை​தளங்​களில் வைரலாகி வரு​கின்​றன. அதில் ஒரு வீடியோ​வில் அவரது வித்​தி​யாச​மான யாத்​திரையை கவனித்த காவல் துறை​யினர் அவரை நிறுத்​தி, அவரது பயணம் குறித்து ஆர்​வத்​துடன் உரை​யாடும் காட்​சிகள் உள்​ளன.

நாட்​டின் பல பகு​தி​கள் வழி​யாக கால்​நடை​யாகப் பயணம் மேற்​கொண்ட மோனுவை, வழி​யில் சந்​தித்த பலர் மரி​யாதை​யின் அடை​யாள​மாக அவரது கால்​களைத் தொட்டு ஆசி பெற்​றனர். மேலும், பலரும் அவரை உற்​சாகப்​படுத்தி வாழ்த்​தி, அவரது ஆன்​மிகப் பயணத்​துக்கு ஆதரவு தெரி​வித்​தனர். மோனு​வின் அர்ப்பணிப்பு மற்​றும் தாய்ப்​பாசம் சமூக வலைத்​தளங்​களில் பெரும் வரவேற்​பைப் பெற்​றுள்​ளது. குறிப்​பாக பலரும் அவரை ராமாயணத்​தில் வரும் தாய், தந்தை பக்​தி​யின் சின்​ன​மாகக் கருதப்​படும் ஸ்ரவண குமாருடன் ஒப்​பிட்​டு பாராட்டி வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here