சிஜேபி ஜந்தர் மாந்தர் போராட்டம் 2.0: போலீஸ் கைது நடவடிக்கை – டெல்லி ஸ்தம்பிப்பு

0
21

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் இன்று (அக்.10) சிஜேபி சார்பில் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தச் சூழலில் போராட்டத்துக்கு டெல்லி காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. இதனால், அதிரடி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜந்தர் மந்தர் மற்றும் மத்திய டெல்லி பகுதியை இணைக்கும் பல்வேறு முக்கிய சாலை சந்திப்புகளில் டெல்லி போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தடுப்புகளை அமைத்து, அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் ‘என்ன காரணத்துக்காக செல்கிறார்கள்?’ என விசாரித்த மேற்கொண்ட பிறகே அனுமதிக்கின்றனர்.

இத்தகைய நிலையில் அரசு ஊழியர்கள் தங்களிடம் உள்ள அடையாள அட்டையை காட்டிய பிறகு அந்தந்த பகுதிகளில் பயணிக்க போலீஸார் அனுமதிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் இருந்து வரும் சாமானிய மக்கள், போலீஸாரின் கெடுபிடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய டெல்லி பகுதி ஸ்தம்பித்துள்ளது.

இதோடு டெல்லியின் எல்லை பகுதிகள், முக்கிய ரயில் நிலையங்கள், விமான நிலையத்திலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதிகளில் இருந்து செல்ல முயலும் போராட்டக்காரர்களை தடுக்கும் நோக்கில் இந்த ஏற்பாடு என்று களத்தில் இருந்து தகவல் வந்துள்ளது.

போராட்டக்காரர்களை கைது செய்யும் போலீஸார்

டெல்லியில் ஜந்தர் மந்தர் மற்றும் அந்த பகுதியை ஒட்டிய இடங்களில் காணப்படும் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தும் காவல் துறையினர், அவர்களை கைது செய்தும் வருகின்றனர். பெண்கள் அதிகளவில் இந்த போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்ற காரணத்தால் ‘பிங்க் மகளிர் காவல் படை’-யினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

துருவ் ராட்டி கைது

சிஜேபி போராட்டத்தில் யூடியூபர் துருவ ராட்டி பங்கேற்க வாய்ப்புள்ளது என்று கருதப்படும் நிலையில், குருகிராமில் அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரை போலீஸார் எங்கு கொண்டு சென்றுள்ளனர் என்ற தகவலும் கிடைக்கவில்லை. இதற்கு சிஜேபி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒற்றை நபரை காக்க மத்திய அரசு அதன் படை பலத்தை பயன்படுத்துகிறது. இதனால் டெல்லி முடங்கியுள்ளது என்று ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

சிஜேபி ஜந்தர் மாந்தர் போராட்டம் 2.0

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி வில​கக் கோரி கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் டெல்​லி​யில் இன்று கால​வரையற்ற போராட்​டம் தொடங்கப்பட உள்​ளது.

நீட் வினாத்​தாள் கசிவை கண்​டித்து சிஜேபி சார்​பில் கடந்த ஜூன், ஜூலை​யில் டெல்லி ஜந்​தர் மந்​தரில் மிகப்​பெரிய போராட்​டம் நடத்​தப்​பட்​டது. இதன்​காரண​மாக மத்​திய கல்வி அமைச்​சர் பதவியில் இருந்து தர்​மேந்​திர பிர​தான் வில​கி​னார். இந்த சூழலில் எஸ்​ஐஆர் விவ​காரம் தொடர்​பாக தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ்கு​மார் பதவி விலக வேண்​டும். இல்​லை​யென்​றால் அக்டோபர் 10-ம் தேதி முதல் டெல்​லி​யில் கால​வரையற்ற போராட்டம் தொடங்​கப்​படும் என்று சிஜேபி அறி​வித்​தது.

இதைத் தொடர்ந்து டெல்​லி​யில் பலத்த பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டு உள்​ளன. டெல்லி காவல் துறையைச் சேர்ந்த 15,000 போலீ​ஸாரும், மத்​திய பாது​காப்​புப் படைகளை சேர்ந்த 23,000 வீரர்​களும் குவிக்​கப்​பட்டு உள்​ளனர். ஒட்​டுமொத்​த​மாக 38,000 வீரர்​கள் டெல்​லி​யில் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்டு உள்​ளனர். நாட்​டின் பல்​வேறு பகு​தி​களில் இருந்து டெல்​லிக்கு இயக்​கப்​படும் 13 விரைவு ரயில்​கள் ரத்து செய்​யப்​பட்டு உள்​ளன.

கிழக்கு ரயில்வே நிர்​வாக​மும் சில விரைவு ரயில்​களை ரத்து செய்​திருக்​கிறது. வெளி​மாநிலங்​களில் இருந்து டெல்​லிக்கு வரும் பேருந்​துகள் தீவிர​மாக கண்​காணிக்​கப்​படு​கின்​றன. டெல்லி மற்றும் புறநகர்ப் பகுதி விடு​தி​கள், ஓட்​டல்​களில் தங்​கி​யிருப்​போர் குறித்து விசா​ரணை நடத்​தப்​படு​கிறது. டெல்​லியை ஒட்​டிய அண்டை மாநிலங்​களின் எல்​லைகளில் தீவிர சோதனை நடத்தப்படு​கிறது. டெல்​லி​யின் 57 மெட்ரோ ரயில் நிலை​யங்​கள் இன்று முழு​மை​யாக மூடப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டது.

போராட்​டத்​தில் பங்​கேற்​கும் சிஜேபி தொண்​டர்​களை தடுப்பு காவலில் வைக்க திருமண மண்​டபங்​கள், மைதானங்​கள் தயார் நிலை​யில் வைக்​கப்​பட்டு உள்​ளன. முன்​வரிசை பாது​காப்பு பணியில் ஈடு​படும் போலீ​ஸாரின் உடைகளில் கேமரா பொருத்தப்​பட்டு இருக்​கிறது. சிஜேபி அமைப்​பின் 10,000 நிர்வாகிகள் தடுப்பு காவலில் வைக்​கப்​பட்டு உள்​ளனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here