புதிய தீவிரவாத அலை: இஸ்ரேல் தூதர் எச்சரிக்கை

0
18

பு​திய தீவிரவாத அலை பரவி வரு​கிறது என்று இந்தியா​வுக்கு இஸ்ரேல் தூதர் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

இந்​தி​யா​வுக்​கான இஸ்ரேல் தூதராக ரூவன் அசார் செயல்​பட்டு வரு​கிறார். இந்​நிலை​யில் அண்​மை​யில் அவர் பத்​திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது:

அண்​மை​யில் துபாயி​லிருந்து இஸ்​ரேலின் டெல் அவிவ் நோக்கி புறப்​பட்ட ஃபிளை துபாய் விமானத்தை கடத்தி மோத முயற்சி நடந்​தது. ஆனால் அதிர்​ஷ்ட​வச​மாக இது முறியடிக்​கப்​பட்​டது. இந்​திய விமானி ஸ்மித் மச்​சா​ரின் வீரதீரச் செயல், பயணி​களின் துணிச்​சல் ஆகிய​வற்​றின் காரண​மாகவே இந்​தத் தாக்​குதல் முறியடிக்​கப்​பட்​டது. ஸ்மித் மச்​சார் பாராட்​டுக்​குரிய​வர்.

சமீபகால​மாக உலகம் முழு​வதும் தீவிர​மான வகை​யில் இஸ்லாமிய தீவிர​வாதத் தாக்​குதல் அலை பரவி வரு​கிறது. தீவிரவா​தி​கள் நம்மை விட வேக​மானவர்​கள். நாம் அவர்​களை விட வேக​மானவர்​களாக மாற வேண்​டும். நாம் விடா​முயற்​சி​யுடன் செயல்​பட்டு அவர்​களது தாக்​குதல் திட்​டங்​களை முறியடிக்க வேண்​டும். நிச்​சய​மாக அடுத்த தீவிர​வாத அலை ஏற்பட வாய்ப்புள்​ளது.

இந்​திய பிராந்​தி​யத்​தில் உள்ள தீவிர​வாத அமைப்​பு​களுக்கு ஹமாஸ் அமைப்பு உத்​வேகம் அளித்​துள்​ளது. இது​போன்ற தாக்குதல் மீண்​டும் ஏற்​படு​வதைத் தடுக்க நாம் எச்​சரிக்​கை​யுடன் இருக்க வேண்​டும்​. இவ்​வாறு தூதர்​ ரூவன்​ அசார்​ தெரி​வித்​தார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here