லண்டனில் இருந்து சிகாகோ புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் 28 ஆயிரம் அடி கீழே இறங்கியது: அவசரநிலை அறிவிக்கப்பட்டு தரையிறங்கியது

0
23

இங்​கிலாந்​தின் லண்​டனிலிருந்து சிகாகோ நகருக்கு புறப்​பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் அயர்​லாந்​துக்கு மேல் பறந்​த​போது 28 ஆயிரம் அடி கீழே இறங்​கிய​தால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து விமானத்​தில் அவசரநிலை அறிவிக்​கப்​பட்​டது. பின்​னர் விமானம் மீண்​டும் லண்​ட​னுக்​குத் திரும்​பியது.

பிரிட்​டிஷ் ஏர்​வேஸ் நிறு​வனத்​துக்​குச் சொந்​த​மான பிஏ295 என்ற விமானம் நேற்று லண்​டன் ஹீத்ரு விமான நிலை​யத்​திலிருந்து அமெரிக்​கா​விலுள்ள சிகாகோவுக்​குப் புறப்​பட்​டது. போயிங் 777-200இஆர் ரக விமான​மான இது, சிகாகோ ஓ’ஹேர் சர்​வ​தேச விமான நிலை​யத்தை சென்​றடைய 8 மணி நேரம் 40 நிமிடங்​கள் எடுத்​துக்​கொள்​ளும்.

இந்​நிலை​யில் அயர்​லாந்து நாட்​டின் வான்​பரப்பு மீது விமானம் 37 ஆயிரம் அடி உயரத்​தில் பறந்​து​கொண்​டிருந்த நிலை​யில், திடீரென 28 ஆயிரம் அடி கீழே இறங்கி 9 ஆயிரம் அடி உயரத்​துக்கு வந்​தது.

கடந்த வாரம் துபாயி​லிருந்து டெல் அவிவ் நோக்கி சென்ற ஃபிளைது​பாய் விமானத்தை மோதச் செய்ய முயற்சி நடந்த நிலை​யில், சிகாகோ விமானம் திடீரென அதிக உயரத்​திலிருந்து கீழே இறங்​கிய​தால் பயணி​கள் பயத்​தில் அலறினர். இதைத் தொடர்ந்து ஸ்கு​வாக் 7700 (Squawk 7700) எனப்​படும் விமானங்​களால் பொது​வான அவசர நிலை​யைக் குறிக்​கப் பயன்​படுத்​தப்​படும் சர்​வ​தேச அளவில் அங்​கீகரிக்​கப்​பட்ட டிரான்​ஸ்​பான்​டர் குறி​யீட்டு சமிக்ஞை விமானத்​திலிருந்து அனுப்​பப்​பட்​டது. இந்த அவசரநிலைக்​கான காரணம் இது​வரை பொது​வெளி​யில் வெளி​யிடப்​பட​வில்​லை.

இதைத் தொடர்ந்து விமானிகளுக்கு கிடைத்த உத்​தர​வின் பேரில் மீண்​டும் விமானம் இங்​கிலாந்​துக்​குத் திருப்​பப்​பட்​டது. ஆங்​கிலக் கால்​வா​யின் மீது சில முறை விமானம் வட்​டமடித்த நிலை​யில் விமானம் மீண்​டும் லண்​டனில் தரை​யிறங்​கிய​தாக தகவல் வெளியாகி உள்​ளது. இதனால் பயணி​கள் நிம்​ம​திப் பெரு​மூச்சு விட்​டனர். விமானத்​தின் உயரம் திடீரென அதிக அளவு குறைந்ததால் பயணி​களும், வி​மான ஊழியர்​களும்​ சில நிமிடங்கள்​ தி​கி​லில்​ உறைந்​தனர்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here