சைபீரியாவில் பெண் ஆராய்ச்சியாளர் மர்ம மரணம்? – பிளேக் நோய் அச்சத்தால் உலக நாடுகள் கவலை

0
21

ரஷ்யாவின் சைபீரிய பிராந்​தி​யத்​தில் பிளேக் நோய் தொடர்​பான பெண் ஆராய்ச்சியாளர் ஒரு​வர் மர்​ம​மான முறையில் உயி​ரிழந்​துள்​ளார்.

கிழக்கு சைபீரி​யா​வில் ஷெலெ​காவ் நகரில் இர்​குட்​ஸ்க் பிளேக் எதிர்ப்பு ஆராய்ச்சி மையம் அமைந்​துள்​ளது. இங்கு ஆய்​வகத் தொழில்​நுட்ப வல்​லுந​ராகப் பணி​யாற்றி வந்த டாரியா ஷிபிலோவா (28) என்ற பெண், கடுமை​யான நிமோனியா காய்ச்சலால் பாதிக்​கப்​பட்டு அக்​டோபர் 2 அன்று உயி​ரிழந்​தார்.

அவருடன் தொடர்​பில் இருந்​த​தாகக் கருதப்​படும் 197 பேரில் 189 பேர் மருத்​து​வக் கண்​காணிப்​பிற்​காக மருத்​து​வ​மனை​களில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர். இருப்​பினும், அவர்​கள் யாருக்​கும் இது​வரை நோய்க்​கான அறிகுறிகள் தென்​பட​வில்லை என்று சுகா​தா​ரத்துறை தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து ‘லியூடி பைக்​கலா’ என்ற ரஷ்ய ஊடகம் வெளி​யிட்ட செய்​தி​யில், “உயி​ரிழந்த ஷிபிலோ​வா, செப்​டம்​பர் 25 அன்று பிளேக் நோயை உண்​டாக்​கும் பாக்​டீரியா அடங்​கிய சோதனைக்​குழாய் ஒன்றை ஆய்​வகத்​தில் தவறு​தலாக உடைத்​து​விட்​ட​தாக​வும், அதிலிருந்து அவர் நோய்த்தாக்​குதலுக்கு உள்​ளான​தாக​வும் தகவல்​கள் கிடைத்​துள்​ளன.

ஆனால், ஆய்​வகத்​தில் கிரு​மிகள் கசிந்​த​தாகக் கூறப்​படு​வதற்கு ரஷ்​யா​வின் மத்​திய சுகா​தார முகமை​யான ‘ரோஸ்​போட்​ரெப்​நாட்​சோர்’ மறுப்பு தெரி​வித்​துள்​ளது. மேலும், ஷிபிலோ​வா​வின் மரணத்​திற்கு காரணம் அறியப்​ப​டாத நிமோனியா தான் காரணம் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது்.

உலக நாடு​கள் கவலை

நுரை​யீரலைத் தாக்​கும் நிமோனிக் பிளேக் நோய் என்​பது கரோனா போல மூச்சு திணறலை ஏற்​படுத்​து​வ​தாகும். ஆரம்பகட்ட அறிக்​கை​களில் சில உள்​ளூர் அதி​காரி​களும் பிராந்திய ஆளுநர் அலெக்சி சிடேனோ​வும் ‘பிளேக்’ என்ற வார்த்தையைக் குறிப்​பிட்ட போதி​லும், பின்​னர் அதி​காரப்​பூர்வ அறிக்கை​களில் காரணம் அறியப்​ப​டாத நிமோனியா என மாற்றப்​பட்​டது சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இது​போன்ற தகவல் முரண்​பாடு​கள் காரண​மாக, உலகள​வில் குறிப்​பாக அமெரிக்க வெள்ளை மாளிகை வரை இது தொடர்​பான தகவல்​களை உற்​று​நோக்கி வரு​கின்​றன. எனினும் தற்​போதைய நில​வரப்​படி, சைபீரி​யா​வில் பிளேக் நோய் பரவி​யுள்​ளது என்​பது அதி​காரப்​பூர்​வ​மாக உறு​திப்​படுத்​தப்​பட​வில்​லை.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here