தமிழக கோயில்களுக்கு வழங்கப்பட்ட யானைகளை திரும்ப பெற வேண்டும்: அசாம் அரசிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்

0
16

அசாமில் இருந்து 5 யானை​கள் அண்​மை​யில் தமிழகக் கோயில்​களுக்கு கொண்டு வரப்​பட்​டன. இதில் மதுரை மீனாட்சி அம்​மன் கோயிலுக்கு துர்​கா, திரு​வண்​ணா​மலை அண்ணா​மலை​யார் கோயிலுக்கு ஹீராலால் மற்​றும் சிவா, வைத்தீஸ்​வரன் கோயிலுக்கு ரூப்​சிங், காஞ்சி காமாட்சி அம்​மன் கோயிலுக்கு புஜ்லி யானை​கள் வழங்​கப்​பட்டு உள்​ளன.

இந்த சூழலில் அசாம் காங்​கிரஸ் தலை​வர் கவுரவ் கோகோய் கூறியிருப்​ப​தாவது: அசாமில் இருந்து 5 யானை​கள் தமிழகத்​துக்கு இடமாற்​றம் செய்​தது தொடர்​பாக வனவிலங்கு ஆர்​வலர்​கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ஐந்து யானை​களும் நன்​கொடை​யாக வழங்​கப்​பட்​ட​தா? விலை கொடுத்து வாங்​கப்​பட்​ட​தா? பணப் பரி​மாற்​றம் நடை​பெற்​றது என்​றால் எவ்​வளவு தொகை கைமாறியது் என்​பது குறித்து அரசு விளக்​க வேண்​டும்.

தமிழகத்​துக்கு வழங்​கப்​பட்ட ஜாய்​மாலா யானை விவ​காரத்​தில் பல்​வேறு குற்​றச்​சாட்​டு​கள் எழுந்​துள்​ளன. இதன்​பிறகும் 5 யானைகள் தமிழகத்​துக்கு இடமாற்​றம் செய்​யப்​பட்டு உள்​ளன. ஐந்து யானை​களை​யும் திரும்​பப் பெற வேண்​டும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here