ம.பி.யில் மசூதியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: 10 பேர் கைது

0
34

மத்தியப் பிரதேசத்​தில் 2028-ம் ஆண்டு கும்​பமேளா நடை​பெற உள்​ளது. இதைமுன்​னிட்​டு, உஜ்ஜைன் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்​ப​தற்​காக, ரூ.9.8 கோடி மதிப்பிலான சாலை விரி​வாக்​கப் பணி​கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்​நிலை​யில், உஜ்ஜைன் நகரில் உள்ள ஷாஹி மசூ​தி​யின் ஒரு பகுதி சாலை விரி​வாக்​கப் பணிகளுக்கு இடையூறாக உள்​ளது.

இதையடுத்​து, முஸ்​லிம் சமூகத்​தைச் சேர்ந்த ஒரு தரப்​பினர் மசூதியை இடிப்​ப​தற்கு எதிர்ப்பு தெரி​வித்​தனர். இதைத் தொடர்ந்து, அதி​காரி​கள் மசூ​தியை இடிக்க தயா​ரான நிலை​யில், நேற்று காலை முஸ்​லிம் சமூகத்​தைச் சேர்ந்த பெண்​கள் உள்​ளிட்ட ஏராள​மானோர் திரண்டு போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

அப்​போது, சில இடங்​களில் கல்​வீச்சு சம்​பவங்​கள் நடை​பெற்​றன. போராட்​டக்​காரர்​களைக் கலைக்க போலீ​ஸார் கண்​ணீர் புகைகுண்​டு​களை வீசினர். இந்த வன்​முறை தொடர்​பாக, 10 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

சாலை விரி​வாக்கத்​துக்​காக முதல்​வர் மோகன் யாதவ் உஜ்ஜைனில் உள்ள தனது பூர்​வீக வீட்​டின் ஒரு பகு​தியை தானே கடப்​பாரை​யால் இடித்து அகற்​றி​னார். “நகரின் வளர்ச்சி என்று வரும்​போது, நாம் முதலில் முன்​னு​தா​ரண​மாக இருக்​க வேண்​டும்​” என முதல்வர் தெரி​வித்​துள்​ளார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here