‘புருஷன்’ படப்பிடிப்பில் நடிகர் விஷால் காயம்

0
24

சுந்​தர்​.சி இயக்​கத்​தில் விஷால் நடித்து வரும் திரைப்​படம், ‘புருஷன்’. இதில் தமன்​னா, யோகிபாபு ​முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைக்​கிறார்.

தமிழ், தெலுங்​கில் உரு​வாகும் இப்​படத்தை அவ்னி சினி​மாக்​ஸ், பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்​கிறது. ஆக் ஷன் கலந்த காமெடி படமான இதன் கிளை​மாக்ஸ் காட்​சிக்​கான படப்​பிடிப்பு தற்​போது கோவா​வில் நடை​பெற்று வரு​கிறது. அப்​போது எதிர்​பா​ராத​வித​மாக விஷால் முதுகில் பலத்த காயம் ஏற்​பட்​டது.

இதுபற்றி விஷால் கூறும்​போது, “பரபரப்​பான சண்​டைக் காட்​சி​யின்​போது எதிர்​பா​ராத வித​மாக விபத்து ஏற்​பட்டு முதுகில் காய​மானது. மருத்​து​வப் பரிசோதனைக்​குப் பிறகு முழு​மை​யாகக் குணமடைய மூன்று வாரங்​கள் ஓய்​வில் இருக்​கு​மாறு மருத்​து​வர்​கள் அறி​வுறுத்​தி​யுள்​ளனர்.

இதனால், நடிகர் சங்​கத்​தின் பொதுக்​குழுக் கூட்​டத்​தில் கலந்து கொள்ள முடிய​வில்​லை. விரை​வில் குணமடைந்​து, மீண்​டும் எனது வழக்​க​மான செயல்​பாடு​களுக்​குத் திரும்ப காத்​திருக்​கிறேன். அக்​கறை​யுடன் விசா​ரித்த அனை​வருக்​கும் நன்​றி” என்று குறிப்​பிட்​டுள்​ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here