‘ஜெயிலர் 2’ இரண்டாவது சிங்கிள் வெளியீடு: ஒன் சன் ஒன் மூன் பாடல் எப்படி?

0
21

ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தின் இரண்டாவது சிங்கிளான ‘ஒன் சன் ஒன் மூன்’ படலைப் படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

இந்தப் படத்தில் நடிப்பவர்களின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் வீடியோக்களை படக்குழு கடந்த சில நாட்களாக வெளியிட்டு வந்த நிலையில் இரண்டு நாட்களாக, படத்தின் இரண்டாவது சிங்கிளான ‘ஒன் சன் ஒன் மூன்’ வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியிட்டு வந்தது. இந்த நிலையில் அந்த சிங்கிள் பாடலைப் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. 

அனிருத் இசையமைத்து பாடி இருக்கும் இந்தப் பாடலை  அவருடன் இணைந்து எம்.எஸ்.கிருஷ்ணாவும் பாடியுள்ளார்.  பாடலை ஹைசன்பெர்க், சூப்பர் சுபு எழுதியுள்ளனர். மேற்கத்திய இசை, இந்திய இசையைக் கலந்து அனிருத் கொடுத்திருக்கும் இந்தப் பாடல் மெல்லிசையாக மனதை வருடுகிறது.

உறுத்தாத இசையில் ஒலிக்கும் ‘இன்னைக்கும் என்னைக்கும் ஒரு தலைவன் தான்’ என்ற வரிகள் ரஜினியின் ‘பாட்ஷா’ பட பாடல் ஒன்றை நினைவுட்டுகிறது. அதேவேளையில்  ரஜினிகாந்த்-ன் திரை ஆளுமைக்கு கட்டியம் கூறும் இப்பாடலில் ‘ஜெயிலர் 2’ ரஜினியின் சில காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் ‘ஜெயிலர் 2’.  சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில், ரஜினியுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மேக்னா ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். மோகன்லால், சிவ ராஜ்குமார் கவுரவ வேடத்தில் நடிக்கின்றனர். இந்தப் படம் அக்டோபர் 15-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here