குமரி நகா் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் திறப்பு

0
25

கீழ்குளம் அருகே குமரி நகா் பேருந்து நிறுத்தத்தில் மின் விளக்குகளுடன் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்கூடத்தை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

கீழ்குளம் பேரூராட்சிக்குள்பட்ட குமரி நகா் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாரிடம் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து அவா், சட்டப்பேரவை தொகுதி மேம்பட்டு நிதியிலிருந்து ரூ. 4 லட்சம் ஒதுக்கீடு செய்து, அமைக்கப்பட்ட நிழற்குடை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அமைச்சா் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கீழ்குளம் பேரூா் காங்கிரஸ் கமிட்டி தலைவா் ராஜகிளன், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஜாா்ஜ் ராபின்சன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.இதில், மூத்த காங்கிரஸ் தலைவா் சுகுமாரன், கீழ்குளம் பேரூராட்சி துணைத் தலைவா் விஜயகுமாா், பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் அனிதா ராஜகிளன், மாா்க்ரெட், சமுத்திரபாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here