கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி

0
20

காவிரி நதி ரக் ஷண சமிதி அமைப்பு சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் ரிட் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. கர்நாடகா​வில் நில​வும் குடிநீர் தட்​டுப்​பாடு, விவ​சா​யத் தேவை​களை சுட்​டிக்​காட்டி காவிரி நீரில் தமிழகத்​துக்கு ஒதுக்​கப்​பட்ட பங்​கி​லிருந்து 70 டிஎம்சி நீரை கர்​நாடக மாநிலத்​துக்கு கூடு​தலாக ஒதுக்​கீடு செய்ய வேண்​டும் என்று அந்த மனு​வில் கோரப்​பட்​டது.

மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிப​தி​கள்,‘‘காவிரி நீர் பங்​கீடு தொடர்​பாக உச்சநீதி​மன்​றம் ஏற்​கெனவே தீர்ப்பு வழங்கி உள்​ளது. காவிரி மேலாண்மை ஆணை​ய வழி​காட்​டு​தல்​களும் உள்​ளன. எனவே, இந்த மனுவை ஏற்க முடியாது,’’ என்று கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here