சிஆர்பிஎப் படை​யில் பெண்கள் நியமிக்கப்பட்டு 40 வருடம் நிறைவு: முக்​கிய வீராங்​க​னை​களை கவுரவிக்க திட்​டம்

0
22

மத்திய பாதுகாப்பு படை​யான சிஆர்பிஎப்பில் பெண்கள் நியமிக்​கப்​பட்டு 40 வருடங்​கள் முடிவடைவதை முன்னிட்​டு, பணி​யில் முக்​கியப் பங்​காற்​றிய வீராங்​க​னை​கள் கவுரவிக்​கப்பட உள்​ளனர். மத்​திய பாது​காப்பு படைகளில் பழமையான​தாக இருப்​பது மத்​திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎப்).

ஆங்​கிலேயர் காலத்​தில் தொடங்​கப்​பட்ட இந்​தப் படை​யில் ஆண்கள் மட்​டுமே பணி​யாற்​றினர். பிறகு, முதன்​முறை​யாக செப். 25, 1986-ல் தனிப்​படைப் பிரிவு தொடங்கி சிஆர்​பிஎப்​பில் கமாண்​டோக்​களாக பெண்​களும் பணி​யமர்த்​ தப்​பட்​டனர். பெண்​கள் படை தொடங்கி வரும் செப்​.25-ல் 40 ஆண்​டு​கள் நிறைவடைகிறது.

இதையொட்டி, சிஆர்​பிஎப் நடத்​தும் விழா​வில் அதில் பணியாற்றிய வீராங்​க​னை​கள் கவுரவிக்​கப்பட உள்​ளனர். சீருடை அணிந்து நாட்​டின் பாது​காப்​புக்​கான பொறுப்பை ஏற்​று வழிநடத்துவது மிக​வும் கடினம். இதில், தீவிர​வாதம் மற்​றும் நக்​சலிஸத்​துக்கு எதி​ராக முன்​னணி​யில் நிற்​பதுடன், தேவைப்​படும்​போது நாட்​டுக்​காகத் தங்​கள் உயிரைத் தியாகம் செய்​வதும் முக்கிய​மானது.

இதற்​காக, கடந்த 40 ஆண்​டு​களாக சிஆர்​பிஎப் படை​யில் பெண் வீராங்கனை​களும் ஆண்​களுக்கு இணை​யான பணி​களை மேற்​கொண்டு வரு​கின்​றனர். சிஆர்​பிஎப் தகவலின்​படி, இன்று நாடு முழு​வதும் முக்​கிய​மான பாது​காப்​புப் பகு​தி​களில் 6 பெண்​ படைப்​பிரிவு​கள் பணி​யில் உள்​ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here